புதன், 28 ஜூலை, 2010

முதலிரவு ஆலோசனை ...

நான் ஒரு கன்னிமாறா
நூலகம் இன்னும்
விற்கப்படாத விலை
போகாத புத்தகம்

என் அப்பனின் இரவுக்
கவிதையின் முதல்
பதிப்பு சந்தைக்கு
வந்து முழுமையாக
முப்பதாகிறது

தினம் தினம் எங்கள்
வீட்டில் ...
கண்காட்சி வருகிற
விழிகள் எல்லாம்
உருட்டியும் புரட்டியும்
பார்க்கும்

பாட்டு படிப்பு பண்பு
என்பது பவுனில்
வந்து முடியும்

ஐம்பது நாற்பது
முப்பது இருபது
இனியும் முடியாது
எழுந்திரு

என் திருமணச்
சேமிப்பிற்காக எங்கள்
வீட்டு வயிறுகள்
பசிக்கு பட்டினியையே
செரித்து வளர
பழகிவிட்டன

ஆகையால் அவை
உண்ணா விரதம்
என்பதை ஒரு நாளும்
உச்சரித்தது இல்லை

எனக்காக அவிழ்த்த
கோவணத்தை என்
அப்பன் இன்னும்
கட்டவில்லை

அருணாக்கயிற்றை
அடமானம்
வச்சுத்தான்
மூன்றாம் வருடத்
தேர்வை முழுசா
எழுதினேன்

இனியும் தட்சணை
கொடுத்து தாரமாக்க
அப்பனுக்கோ
வக்கனை இல்லை

ஆகையால்
இன்னும் சில
நாட்களில்
அறுபதுக்கோ ... எழுபதுக்கோ ...

நாளைய பிணத்திற்கு
இன்றே
மலர்வளையமாக
நான் மாறக்கூடும்

அங்கேயும் வந்து
மொய் எழுதி ...
முதலிரவு
ஆலோசனை கூறாமல்

உங்கள் எதிர்
வீட்டிலும் என்னைப்
போல் இன்னொருத்தி அவளது முகம்
பார்த்தே
கண்ணாடியின் பாதரசம் பழுதடைந்து
கொண்டிருக்கலாம்

அவளை முதலில் .!
கரையேற்றுங்கள் ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 27 ஜூலை, 2010

இத முதல்ல பாருங்க ...


என்ன என் கண்ண
பாத்து மயங்கீட்டீங்களா


இப்பவே
கண்ணக் கட்டுதே ...


மட்டமான சரக்க
குடுத்து ஏமாத்தீட்டாங்கயா
இல்லனா நாங்களாவது
மட்டயாவதாவது


இந்தக் கோட்டத் தான்டி
நீயும் வரக் கூடாது
நானும் வரமாட்டேன்
பேச்சு பேச்சாத்தான்
இருக்கனும்


எனக்கு பொண்ணு
பாத்துட்டு இருக்கேன்
நாங்களும்
வளந்துட்டோம்ல


சரக்கு தயார்
தொட்டுக்க ஏதாவது
இருந்தா குடுங்க .!


சொன்னா கேளுமா
உன் வாழைப்பழத்த
நான் திருடி திங்கல


இந்த ஊருக்குள்ள
நான் தாங்க பெரிய ஆளு

எந்த பட்டன
அமுக்கனும்கிற ஒன்னு மட்டுந்தாங்க தெரியாது

எப்டீ
எ ஆளு நேத்திதா
மடிஞ்சது மிர்சலா
இருக்கிராள்ள


பூனைப்படைன்னு
சொல்லுவாங்களே அது
இது தானோ ?


நம்பள
கலாய்க்கிறதுக்குனே
ஒக்காந்து யோசிப்பானோ


ஐயய்யோ
இதுக்கெல்லாம் காரணம்
நான் இல்லீங்க எதா
இருந்தாலும்
கருத்துரையில் சொல்லீட்டு போங்க

அவன் பார்த்துக்குவான்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

இத யாரும் பார்க்காதீங்க ...

பாக்க வேண்டான்னா
கேக்கவா போரீங்க
போங்க அங்க என்ன
தான் நடக்குதுனு
பாருங்க

நீங்க கருப்பா இருந்தாலும் கலையா
இருக்கீங்க

நம்ம காதலிச்சு
கல்யாணம்
செஞ்சுகிட்டா நம்ம
குடும்ப பகை எல்லாம்
தீர்ந்திடும் என்ன
சொல்ர நீ

எம்பேரு என்ன
தெரியுமா ? சுள்ளான்
எங்க தெரு
பொண்ணுக கிட்ட
வச்சுகிட்ட வால ஒட்ட
நருக்கிடுவேன்


காதல் தோல்விப்பா
வாழ்வே மாயம்
உலகே மாயம்


காதலிக்க
எங்கயெல்லாம் இடம்
பாக்க்கராங்கயா


இதுக்காகவே
உட்காந்து
யோசிப்பாங்கலோ


தண்ணீல நீந்திகிட்டே
முத்தம் கொடுக்கிற
சுகமே தனிதாம்பா



போங்க எனக்கு வெட்கமா இருக்கு



மாமா தந்தம் குத்துது
அடிப்போடீ இது
இல்லேனா ஒரு பய
மதிக்க மாட்டான்


உன்னோட உதடு
கொய்யா பழம் போல
அழகா இருக்கு


தல என்ன தல
இப்படி தனியா ?
போடா ஆடி மாசமாம்
பொண்டாட்டிய
கூட்டீட்டு போய்டாங்க

சாச்சுட்டாங்கயா
சாச்சுப்புட்டாங்கய்யா

... படம் பாத்துட்டு
கருத்து சொல்லாம
போனா எப்பூடீ டீ டீ





வெள்ளி, 23 ஜூலை, 2010

உதட்டுக்கு ஆகாது ...

( முத்தம் திண்ணும் மோகினிக்
கவிதைகளின் தொடர்ச்சி )

நமது காவிரிக் கரைப்
பூங்கா சந்திப்பில்
முதல் முறையாக
உன் இதழ் வாசித்தேன்

நீயோ ...
கண்கள் வியர்த்து
விட்டாய்

ஏனடி கண்களில் நீர்
வைக்கிறாய்
நான் தவறு செய்து
விட்டேனா ?

* இல்ல

உனக்கு விருப்பம்
இல்லையா ?

* அது இல்ல

உதடு கடித்து
விட்டேனா ?

* அதுவும் இல்ல

பிறகு இந்த நீர் ஏனடி?


நீ ... கண்களைத்
துடைத்துக் கொண்டு
சொன்னாய்

போடா !
ஒற்றை முத்தம்
உதட்டுக்கு ஆகாது
என்பார்கள் !...
அதை நினைத்துத்
தான் ...

( உங்கள்
கருத்துக்களை
கருத்துரையில் பதிவு செய்யுங்கள் )

ஒரு இனிப்பான காரம் ...

(முத்தம் திணணும்
மோகினி
கவிதைகளின்
தொடர்ச்சி )



நீ...
மொத்தமா கேட்பதை
முத்தமா கேட்கிறாய்
முத்தமா கேட்பதையும்
சத்தமா கேட்கிறாய்

* சரி ... சரி சத்தம்
இல்லாம காதோரம் கேட்கிறேன் காலைக் கடனை கடன் சொல்லாமல்
கட்சிதமா தீர்த்திடு

கணக்குக்கும் எனக்கும்
எப்பவுமே ஆவாது
ஒன்னும் ஒன்னும்
சேர்த்து மூனா தரவா ?

* ஐயய்யோ தப்புடா
ஒன்னும் ஒன்னும்
சேர்த்தா பதினொன்னு
பாரடா

இது எந்த ஊர் கணக்கு
* எங்க ஊர் கணக்கு

பதிக்கவா ஒன்னுதான்
* ம்ம்ம்
பதினொன்னு தா

போடி நீயும் உன்
கணக்கும்
*ஏதோ கொடுத்து
கொடுத்து சிவந்து
போன கௌவ்வை
இதழ் கோப்பெருஞ்
சோழன்னு பீத்திக்குற
இனிப்பு ஒன்னு
கேட்டா இல்லீங்கற


நீ கேட்ட இனிப்பு
இப்போதைக்கு இருப்பு
இல்ல ... சுடச்சுட
காரம் இருக்கு
வேணுமா ?

*காரமா ? புதுசா இருக்கே
புதுசு தான்
உனக்காகவே சுடச்சுட
என் உதட்டால
செஞ்சது வேணுமா ?

* அது இது ன்னு
சொல்லி சின்னப்
பொண்ண
ஏமாத்தாதடா ?
வித்யாசம் என்னடா ?


இனிப்பு சாப்டா இரண்டு நாள்ள
திகட்டிடும் முப்பது,
அறுபது
கணக்குக்குள்ள
முடிஞ்சிடும் ஆனா
காரம் சாப்பிட்டா ...
*சாப்பிட்டா ?

காது அடைக்கும்
கண்ணு கலங்கும்
இதழ் இளஞ்சூட்டில்
கொதிக்கும்
உசுருக்குள் அனல்
ரொம்ப அடிக்கும்

இப்ப சொல்லு என்ன
வேணும் ?
இனிப்பா ? காரமா ?


* அப்பப்ப ...
இனிப்பு கொடு
அதிகமா காரம் கொடு

சரியா ?

ம்ம்ம் ... ம்ம்ம் ...
ம்ம்ம் ...


ஐயய்யோ
யாராவது
இருக்கீங்களா ?

* யாரும்
பார்க்கலையே ...
... ..

(உங்கள்
முத்தம் திண்ணும்
மோகினி இதேபோல்
உங்கள்
இதழ் கடித்து காரம்
சாப்பிட்டிருந்தால்
கருத்துரையில்
பதிவு செய்யுங்கள் )

புதன், 21 ஜூலை, 2010

முத்தம் திண்ணும் மோகினி


* உனக்கு கொடுத்த காதல் புத்தகத்தை
படித்து விட்டாயா ?
எப்படி இருக்கிறது ?
என்று கேட்டேன்

நீயோ ...
இரவல் கவிதைகளை
நான் எப்படி ரசிக்க
முடியும் என்று கேட்டாய்

இதோ உனக்காக
உனக்காக மட்டும்
எழுதுகிறேன்


* வாழ்க்கை
ஒரு தவம்

காதல் ... ?
அது
தவத்தில் தவம் !


*காதல் ...
வரங்கள் கொடுக்கும்
தேவதை - அதுவும்
வாரிக்கொடுக்கும்
தேவதை

அப்படியானால்
நான் ? என்கிறாயா

நீ ...
அந்த காதலையே
வரமாய்த் தந்த தேவதை


* நீ ...
தூரத்தில் பேரழகி

என்னைத் துரத்துவதில்
போர் அழகி !


* நான் உன்னை
அணுவிலும் அணுவாய்
காதலிக்க வேண்டும்

நான் அழுகின்ற
வரையில் காதலிக்க
வேண்டும்

காதல் அழிகின்ற
வரையில் காதலிக்க
வேண்டும்



* நீ என்னைக்
கேட்கிறாய் - அதுவும்
திண்ணக் கேட்கிறாய்

உன் கண்களிலே
குழலைச் சொருகி
என் உயிரைக்
குடிக்கப் பார்க்கிறாய்


*இந்த ...
காதல் தேவதையிடம்
விழிக்காத இரவு
உறங்காத உதயம்
இரண்டையும் நான்
கேட்கப்போவதில்லை

ஒன்று
ஒன்றெ ஒன்று மட்டும்
போதும் .,.
நீ என்னுடன்
இருக்கும் போது

* நான்
உன் தாவனிக்
கவிதைகளை படிக்கும்
போதெல்லாம் உனக்கு
எத்தனை ஆனந்தம்

எனக்காகவே மறைத்து
வைத்திருப்பது போல்
ஒழித்து ஒழித்து
காட்டுகிறாய்


நம் முதல் சந்திப்பில்
உனக்கு
தண்ணீர் தேசத்தை
( புத்தகம் ) மட்டும்
தான் பரிசளித்தேன்

நீயோ ...
உன்னையே
( புகைப்படம் )
தந்து விட்டாய்

சரிதான்
ஒரு தேசத்தையே
அடகு வைத்துத் தான்
உன்னே
பெற்றிருக்கிறேன்


இது கனாகானும்
காலம்
என்ன கனவு கண்டேன்
என்கிறாயா ?

தெரியவில்லை
ஆனால்
கனவு முழுவதும்
உன்னை மட்டுமே
கண்டேன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

சனி, 17 ஜூலை, 2010

முத்தம் திண்ணும் மோகினி

* ஒரு நாள்
பேசிக்கொண்டிருக்கும்
போதே திடீர் என்று
உன் இதழ் உடன்
இதழ் சேர்த்து உன்
உயிரை உறிஞ்சி
எடுப்பது போல்
முத்தமிட்டு விட்டேன்


* நீயோ ...
என் இதழ் பிரித்த
அடுத்த நொடியே
என்னே அரைந்து
விட்டாய் !

* ஒழுங்கா உனக்கு
முத்தம் கொடுக்க
தெரியாதா ?

* ம் ... இந்த முறை
ஒழுங்கா கொடு என்று
இதழ் காட்டி
மிரட்டினாய்

* உனக்கு முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது

அன்று தான் எனக்குத்
தெரிந்தது ... நீ
முத்தம் திண்ணும்
மோகினி என்று
... ... ... ...

* அமாவாசை இருளில்
பளீர் என்று தெரியும்
நட்சத்திரங்களைப்
போல ...

என் முகத்திலும்
தெரிகிறது ...
உன் இதழ் பதித்த
முத்தத் தடயங்கள்.


* உன்னுடன் நடக்கும்
களவிப்போரில்
உன் நக வாள்கள்
கிழித்து என் மார்பில்
வழிகிறது ...
செர்ரி நிறத்தில் தேன்

அட ... உனக்காக
உதிரம் சிந்துவதில்
தான் எத்தனை
ஆனந்தம் எனக்கு !

* தயவு செய்து
இரகசியம் சொல்கிறேன் என்று
என் காதருகே வராதே

உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் பட்டாலே
நான் மோட்சம்
அடைந்து விடுகிறேன்


* நீ என்னதான்
சேலை கொண்டு
மறைத்தாலும் உன்

நந்தவன மொட்டுக்களை காற்று
எனக்கு காட்டி
கொடுத்து விடுகிறது


* இனியும் உன்
ஏவுகனைத்
தாக்குதலுக்கு என்
இதயம் தாங்காது

என்ன விழிக்கிறாய் ?
உன் வெட்கத்தைத்
தான் சொல்கிறேன்


--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 13 ஜூலை, 2010

மணல் சிற்பங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com