சனி, 30 அக்டோபர், 2010

வாக்காளர்பட்டியலில் உங்கள் பெயர்பார்க்க

நாம் வாக்காளர் பட்டியலில்
பெயர்சேர்க்கவும்
எழுதிக் கொடுத்த பெயர் பட்டியலில்
இடம் பெற்றதா என்று
அறியவும் நாம் படாதபாடு பட்டிருக்கிறோம் இனி
கவலை வேண்டாம்

தேர்தல் ஆனையம்
வாக்காளர் பட்டியலை
இனையத்தில் வெளிவிட்டிருக்கிறது
இதன்மூலம் நம் பெயரை சரிபார்த்துக்
கொள்ளலாம்
முகவரி இதோ
www.elections.tn.gov.in/eroll/
( இதை கிளிக் செய்க )
இதில் முதலில்
மாவட்டம் பின் தொகுதி பெயரை கொடுக்க ஒரு அட்டவனை வரும் அதில் வாக்காளர்
பெயர், தாய் , தந்தை,
கணவர் பெயர்களை கொடுக் பட்டியலில் நம் பெயர் முகவரி
வாக்குச்சாவடி பெயர் என அனைத்து விவரங்களும் வருகிறது

தேர்தல்
ஆனையத்திற்கு நன்றி
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 14 அக்டோபர், 2010

புகைக்கும் தோழர்களே ...

கீழே உள்ள படங்களை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நண்பர் சந்ரமோகனிடம்
காட்டி என்ன சொல்ல
தோனுது என்றேன்

இதோ அவர் சொன்ன
தத்துவங்கள்


இவ்ளோ
குடிச்சானுகளே
ஒன்னாவது எனக்கு
கொடுத்தானுகளா
பாவிக


இதுல வாய்
எங்க
இருக்கு


பஞ்சு வந்தது கூட
தெரியல நாய
இனியாவது குழல்(PIPE)
வாங்கி சொருவிக்கோ


ரெம்ப யோசிக்காத
எல்லா எங்களோடதான்

ஒரு சிகரட் புகைய
எத்தன பேர்தான்டா
இழுப்பீங்க


இன்னு ஏன்டா அத
வாயில வச்சுட்டு
இருக்க


பஞ்சையாவது
மிச்சம்
வச்சானே

புதன், 6 அக்டோபர், 2010

தபூ சங்கர் கவிதைகள்

நான் வழிபட இந்த
உலகத்தில்
எத்தனையோ கடவுள்
இருக்கின்றது
ஆனால் நான்
காதலிக்க இந்த
உலகத்தில் நீ மட்டும்
தான் இருக்கிறாய்

சிந்தும் மழை மீண்டும்
மேகத்துக்குள் போவது
இல்லை ஆனால்
நீ சிந்தும் வெட்கம்
மெல்லாம் மீண்டும்
உன்
கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறது

என் சின்ன இதயத்தில்
உன்னை எப்படி குடி
வைக்கப் போகிறேன் என்றிருந்தேன்
நீ உள்ளே நுழைந்ததும்
என் இதயம்
பெரியதாகி விட்டது

நில உச்சவரம்பு
சட்டம் போல
அழகு உச்ச வரமபுச்
சட்டம் பேட்டுத்தான்
உன் அழகின்
கொட்டத்தை அடக்க
வேண்டும்

புதிய புடவை
எப்படி இருக்கு
என்றாய்
நல்லா இல்லனு
சொல்லு என்று
கெஞ்சியது நீ
களைந்து கொடியில்
போட்டிருந்த புடவை

நீ முகம் கழுவுகையில் ஒடிய
தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டு விட்டேன்
நான் ஒவ்வொரு
நாளும் இவ்வளவு
அழகையா வேண்டாம்
என்று நீ நீரில்
விடுகிறாய்

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்
இவன் உனக்காகப்
படைக்கப்பட்டவன்
இப்படிக்கு
இறைவன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 5 அக்டோபர், 2010

பா.விஜய் கவிதைகள்

புதிது புதிதாக எழுதச்
சொல்கிறார்கள்
உன் பழைய
ஞாபகங்களைத் தான்
கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற
கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே
அற்புதமான
அன்பளிப்பு இந்த
வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா

இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்
நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன்
வானியல்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வெள்ளி, 1 அக்டோபர், 2010

பா.விஜய் கவிதைகள்

தீயின் திறப்புவிழா
உன் புன்னகை

நீ
வாசத்தை உற்பத்தி
செய்யும் நாணத்
தொழாற்சாலை

குனிந்து நகரும்
கோபுரம்

நிமிர்ந்த நிலவே
கண்ணுக்குத்
தெரியாத பூக்கள்
உனக்கு வாசமானது
கண்ணுக்கு தெரியும்
கனிகள் உனக்கு
வசீகரமானது

மலராயுதம் நீ

நீ முகத்தை துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டியிருந்தது
சில வானவில்கள்

அருவிகளை என்
கண்களுக்கு தந்து
விட்டு எங்கே நீ
குளிக்க சென்று
விட்டாய்
(தொடரும்)
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com