செவ்வாய், 29 ஜூன், 2010

மரங்களைக் காப்போம் மானுடம் காப்போம்

என் மடியில் தான்
தூங்கினாய் ...என்
விரல்பிடித்துத் தான்
நடைபழகினாய்

உன் ஆரம்பக்கல்வி
என்னோடுதான் ...

விடுமுறை நாட்களில்
என்னுடன்விளையாட வருவாய் ...

ஒரு மழைக்காலத்தில்
என்னுடன் இருக்கும் போதுதான்
உன் காதலியை சந்தித்தாய்

திருமணத்திற்கு
பந்தற்கால் போட்டதிலிருந்து
வீட்டிற்கு வாசற்கால்
வைத்தது வரை
நான் தான்...


அறுபதுகளில்...
தனியாய் எங்கும்
போகமுடியாததால்
இரண்டாம் தாரமாய்
என்னை கட்டிக்
கொண்டாய்

உன் ...இருதி யாத்திரையிலும்
எனக்கு பங்குண்டு

இப்பொழுது கூட
உன்னையும் கேட்காமல் என்னையும் கேட்காமல்
உடன்கட்டை ஏற்றியிருப்பதும்
என்னைத்தான்...

நான்... நான்தான்
மரம் ...

மரங்களைக்
காப்போம் ...
மானுடம் காப்போம் ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

திங்கள், 28 ஜூன், 2010

தலைமுறை தாண்டிய உறவு

நீ...
உன் காதலியை விட
அதிகம் முத்தமிட்டது
என்னைத்தான்

உன்
கோபம் ... சோகம்
சிரிப்பு ... எதுவாயினும்
என்னோடுதான்

அன்னை சொல்லியும்
கேட்காமல்
முதலிரவுக்கு முன்பு
கூட என்னை
முத்தமிட்டுச்
சென்றவன் நீ

மனைவியைப் பிரிந்து
மூன்று நாட்கள்
இருக்க முடிந்த உனக்கு என்னைப்
பிரிந்து மூன்று மணிநேரம் முழுமையாய் இருக்க
முடியாது

இது கால் நூற்றாண்டை கடந்து
விட்ட உறவு

உன் இதயத்தை நீ
யார்யார்க்கோ
கொடுத்திருந்தாலும்
உன் சுவாசம் முழுவதும்
சுற்றிவருவது நான்
மட்டுமே

ஏனோ...
சில நாட்களுக்கு முன்
பேசிக்கொண்டிருக்கும்
போதே என்னைவிட்டு
பிரிந்து விட்டாய்

இருந்தும் ...
தலைமுறை தாண்டிய உறவாய் ...
உன்னைப் பார்த்தே
வளர்ந்த உன்
மகனின் கையில்
நான்... ... ...
சிகரட்

--------------------------------------------------------------
Ovi Mail: Get mail on your mobile or the web
http://mail.ovi.com

மேகமே... மேகமே...

எங்கே கிளம்பபி விட்டீராகள் எநத
கிராமத்து நீரை
கொள்ளை அடிக்கப்போகிறீர்கள்

நீங்கள் பல்லக்கில்
ஏறி பவனி வரும்போது
எங்கள் பக்கத்து
கிராமத்திற்காக
கொஞ்சம் கண்ணீர்
வடியுங்கள்
வறண்டு கிடக்கும்
வயல்கள் வாழ்க்கை
பெறட்டும்

வானம்பாடிகள் வந்து
முறையிட்டுமா
தெரியவில்லை ?
அங்கு ஒருவனாந்திரம்
பாலையானது

நீ...
இரத்தம் சிந்தாமல்
நாங்கள்
இரணப்பட்டது போதும்

எப்போதும் இல்லா
விட்டாலும்
அவ்வப்போது எங்களுக்காக
அழுதுவிடு

உனது நீலிக்கண்ணீர்க்காகவே
பல நிலங்கள்
நித்திரையின்றி
கிடக்கின்றன

போதும் போதும்
அந்த நிலவை துரத்தித்
துரத்தி சோறு
ஊட்டியது போதும்
இங்கே பல குழந்தைகள் பழைய
கஞ்சிக்கு வழியில்லாமல்
கிடக்கின்றன

சீக்கிரம்... சீக்கிரம்...
அந்த உச்சிச் சூரியனை உந்தன் சிப்பாய்களைக்
கொண்டு
சிறைபிடித்து வை

களைப்பாற வேண்டும்
எங்கள் கடலைக்காட்டு
விவசாயி

--------------------------------------------------------------
Ovi Mail: Create an account directly from your phone
http://mail.ovi.com

புதன், 23 ஜூன், 2010

FW: சிகரெட்

சிகரெட்


இருவிரல் இணையும்
நுனிமட்டும் சிவக்கும்
இறுதியில் உன் வாழ்க்கை
ஒருபிடிச் சாம்பல்
ஓதாமல் ஊதும்-சங்கு
ஊதாமல் ஊதும்

புகைத்தல்
உனது புன்னகைக்கு
மட்டுமல்ல-பூக்களுக்கு
செய்யும் துரோகமும் கூட

ஒவ்வொரு இழுப்பின் முடிவிலும்
உனக்கு மட்டும் அல்ல
காற்றுக்கும் சேர்த்துதான்
கல்லறை
கட்டிக்கொண்டு
இருக்கிறாய்

காற்றால் நிரப்ப வேண்டிய
நுரையீரலுக்குள் ஏன்
கரையான் கூடு கட்டிக்
கொள்கிறாய்.

இயற்கையைப் பிடுங்கி
இயற்கையைக் கொன்று
இன்பம் காண்கிறாயா?

தன்னுயிர் நீக்க தனக்கு
உரிமை இல்லாதபோது
காற்றின் குரல்வளை
நெறிக்க
உனக்கேது உரிமை.

இனி..
புகைத்தலும் தேச துரோகமே!
சுயகொள்ளி போட்டுக்கொள்வதில்
இனியும் சுகப்படாதே..

அமுதுண்ட அதரங்களில்
அமில
உருளைகளை
அணியாதே!

புகைத்தலை மற
புன்னகை திற
கனவுகள் தெளிவாகட்டும்
கார்மேகம் உனக்காக
பொழியட்டும்.!

பகத்சிங்

இந்தநாள்... இயற்க்கை ஒரு சிவப்புச் சூரியனை சிறை எடுத்துக் கொண்டநாள்

இந்திய தாய்க்கு சுதந்தர பிரசவத்தின் சுகவலியை எடுக்கச் செய்தவனுக்கு இடுகாட்டில் படுக்கை விரித்த நாள்

23வயதில் இந்திய தாய்க்கு உயிர்தானம் செய்த உத்தமனனின் திருநாள்

--------------------------------------------------------------
Ovi Mail: Get mail on your mobile or the web
http://mail.ovi.com

செவ்வாய், 22 ஜூன், 2010

விழித்திடு தோழா

விடியல் வருகின்ற
நேரம் உன் விழிகளில்
எதற்கிந்த பாரம்
நம் கனவுகள்
கை கூடும் காலம் இனியும் இருள் கண்டு எதற்கிந்த சோகம்

நாம் சிறகுகள் முளைத்தும் கோழிகளா?
வெறும் சில்லரை பொருட்கள் தான் நம்
தேவைகளா?

இது உரிமை மீட்கும்
போராட்டம்
இதற்கு நம் ஒற்றுமை
ஒன்றே உயிரோட்டம்

தடைகள் உடைத்திட
எழுந்திடு தோழா
நம் தாயிடம் குடித்தது
பாலன்றி வேறா ?

சாதனை படைத்தவை நம் கைகள் பல சரித்திரம் படைத்தவை நம் கைகள்
கோடிச் சூரியனின்
தீப்பிழம்பை கொட்டிச்
செய்தவை நம் விழிகள்

ஒப்பனை முகங்களை நம்பாதே
உன் உரிமைச் சிறகுகளை இழக்காதே

வாழ்க்கை என்பது
நீரோட்டம்
இதில் வாழத்தேவை
போராட்டம்

வலிகள் இல்லாமல்
வாழ்க்கையா ?
அப்படி வாழ நினைப்பது
இயற்கையா ?

ஈராயிரம் இதயங்கள்
உனக்காக
இனியும் கொடுமைகள்
பொறுப்பது எதற்காக ?

இனிஒரு ... இனிஒரு
விதி செய்வோம்
நம் உரிமை மீட்கும்
போரினில் வெல்வோம்

ஞாயிறு, 20 ஜூன், 2010

இளைஞனே...

உனக்குளளும் ஒரு சுனாமி அலை
சும்மாய் கிடக்கலாம்
ஒரு யுக நெருப்பு
உறங்கிக் கொண்டிருக்கலாம்
அதை முதலில் எழுப்பு
உனது இலட்சியம்
உயிர் பெரும்

நான் யார் ?
என்பது அறி உறக்கத்தை
உறங்கச் சொல்
உனை நெருங்க வேண்டாம்
உரக்கச் சொல்

கடல் தாண்டியும்
கல்வி கல்
பயிற்சி முடிந்ததும் பாரதம் திரும்பு

அன்னை பூமிக்காக
அயராது உழை
நிரந்தர வெளிநாட்டுப் பணி நிச்சயம் வேண்டாம்

அடிமை முத்திரை குத்திக் கொள்வதில் இனியும்
ஆனந்தப்படாதே

கவலை கொல்
கவிதை கொள்
இதயம் முழுவதும்
இலட்சியத்தால் நிரப்பு

வெல்வதற்கே தோல்வி
எழுவதற்கே வீழ்ச்சி

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
மட்டுமல்ல...

உன் வாழ்க்கை கூட
உன் கையில் தான்
உள்ளது

சனி, 19 ஜூன், 2010

மரணம் தாண்டி வாழ்வோம்

கண்கள்... அது
காட்சியின் உயிர்
கண்ணீர்... அது
உயிரின் மொழி

கண்கள் தானம் செய்வோம் நாம் காட்சிக்கு உயிரானை
அளிப்போம்

இயற்கையை அழித்துத் தான் நாம் இன்றும்
வாழ்கின்றோம்... அது
இதயம் சோர்வதில்லை
இன்றும் கொடுக்கிறது

இருமுறை நாமும்
இறப்போமா?
இல்லை இன்னொரு
முறைதான் பிறப்போமா?

செந்நீர் தானம் செய்வோமே!
நாம் செழுமை தேசம் படைப்போமே!

மரணம்... மரணம்.. மரணம்... அதையும்
தாண்டி வாழ்வோமே!

செவ்வாய், 15 ஜூன், 2010

காதல் கடிதம்

ஒரு சந்திப்பில்
உன்னை காத்திருக்க
வைத்து தாமதமாக
வந்து விட்டேன்

டேய்... திருடன்டா நீ
அதுவந்து...
பேசாதடா...

அப்படியே திருட்டு முழி
எப்படிடா இத செஞ்ச
(உன் முகம் சிவந்து விட்டது)

... ... அது வந்து
பேரச் சொல்லாத
என்ன... நீ
காரணத்த சொல்லீட்டு திட்டலாமே

காரணமா... காரணமா கேட்குற?

கலகலன்னு இருந்த பொண்ண.,..
யார...
என்னத்தான்

காதலிக்க வச்சு காத்திருக்க வச்சு இப்போ...
கவிதையும் எழுத வச்சுட்டியேடா

என்று... வெக்கத்துடன் உன் முதல் காதல் கடிதம் நீட்டினாய்

அந்த நிமிடம்...

ஞாயிறு, 13 ஜூன், 2010

முத்தம் திண்ணும் மோகினி

காதல் ஒரு புதையல்
இதை தோண்டும் போது
சிலருக்கு...கற்சிலை கிடைக்கும்
சிலருக்கு கண்ணீர் கிடைக்கும் சிலருக்கு கவிதை கிடைக்கும்
எனக்கு கிடைத்த புதையல் மோகினி நீ
அதுவும் சாதாரண மோகினி அல்ல
முத்தம் திணணும் மோகினி

காதல்

காதல்
*நதிகளைத் தேடி கடல்கள் பயணிப்பது
காதலில் மட்டும் தான்
நான்...
இந்த வானநதியைத்
தேடி வந்த
கருங்கடல்

*எல்லா உயிர்களின்
உயிரும் காற்றில்
இருக்கிறது
நீ சுவாசித்த காற்றில் தான் காற்றின் உயிர்
இருக்கிறது

*காதல் வரங்கள்
கொடுக்கும் தேவதை
அதுவும்...
வாரிக்கொடுக்கும்
தேவதை... நீ
அந்த வரத்தையே
வாழ்க்கையாய்
தந்த தேவதை.

* மழைக் காலங்களிள்
மிணாணல்கள் என்னை மிரட்கின்றன
ஒருமுறை... நீ
கண்களை சிமிட்டி
அவற்றை மிரட்டி
வைக்ககூடாதா?