ஏ இந்தியாவே...!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம்
உண்டு என்னிடம்....
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப்
பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு நான் வேறு!
ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம்
அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!
ஒரு சொட்டு தண்ணீருக்காய்
விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின்
ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப்
போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப்
பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒரு பிடி சோற்றுக்கு எங்களை
ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம்
கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம்
தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல்
எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய
அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம்
பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!
போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக்
கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள்
ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக
எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம்
பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில்
அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம்
செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல்
பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற
சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து
கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம்
நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல்
போகட்டும்...
ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல்
கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல்
போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப்
போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்!
நிரந்தரமாகப் போகட்டும்!
-கவிஞர் தாமரை
..........
பின்குறிப்பு:
உங்கள்
குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன்
குழந்தைகள் சிரிக்கட்டும்!
புரட்சிக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரட்சிக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 14 செப்டம்பர், 2011
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
இரத்தம் குடிக்கும் மனிதர்கள்
நவீன உலகத்தில்
ஆடு மாடுகளை விட
அதிகம் அடிமைப்
படுத்தப்படுவது
தொழிலாளர்கள் தான்
நொடிக்கு நொடி
ஒவ்வொரு தொழிலாளியின்
இரத்தமும் வியர்வையும்
உறிஞ்சப்படுகிறது
அதைப்பற்றிய கவிதை
இதோ
வேலை தர
முதன் முதலில்
முதலாளி கோரியது
என் சிறகுகளில்
இருந்து சில
இறகுகளை
வேலைக்கு சேர்ந்த
சில நாட்களில்
என்னைப் பாராட்டி
இரண்டு இறகுகளை
வாங்கிக் கொண்டார்
சில மாதங்களுக்குப்
பிறகு சில சூழ்நிலை
களை முன் வைத்து
மூன்று இறகுகளை
பெற்றுக் கொண்டார்
பின்னொரு நாள்
வேலையை
தக்கவைத்துக் கொள்ள
வேண்டுமாயின்
சில இறகுகள்
வேண்டுமென்று
மறைமுகமாய் மிரட்டி
பிடுங்கிக் கொண்டார்
சிறகுகளற்ற நான்
உயரத்தில் பறக்கும்
முதலாலியைப்
பார்க்கிறேன்
என் இறகொன்றால்
தன் காது குடைந்தபடி
அவர்
இறகேதும்
முளைத்துள்ளதா
எனக் குனிந்து
என்னைப் பார்க்கிறார்
-ஆனந்த விகடன்
ஆடு மாடுகளை விட
அதிகம் அடிமைப்
படுத்தப்படுவது
தொழிலாளர்கள் தான்
நொடிக்கு நொடி
ஒவ்வொரு தொழிலாளியின்
இரத்தமும் வியர்வையும்
உறிஞ்சப்படுகிறது
அதைப்பற்றிய கவிதை
இதோ
வேலை தர
முதன் முதலில்
முதலாளி கோரியது
என் சிறகுகளில்
இருந்து சில
இறகுகளை
வேலைக்கு சேர்ந்த
சில நாட்களில்
என்னைப் பாராட்டி
இரண்டு இறகுகளை
வாங்கிக் கொண்டார்
சில மாதங்களுக்குப்
பிறகு சில சூழ்நிலை
களை முன் வைத்து
மூன்று இறகுகளை
பெற்றுக் கொண்டார்
பின்னொரு நாள்
வேலையை
தக்கவைத்துக் கொள்ள
வேண்டுமாயின்
சில இறகுகள்
வேண்டுமென்று
மறைமுகமாய் மிரட்டி
பிடுங்கிக் கொண்டார்
சிறகுகளற்ற நான்
உயரத்தில் பறக்கும்
முதலாலியைப்
பார்க்கிறேன்
என் இறகொன்றால்
தன் காது குடைந்தபடி
அவர்
இறகேதும்
முளைத்துள்ளதா
எனக் குனிந்து
என்னைப் பார்க்கிறார்
-ஆனந்த விகடன்
வியாழன், 1 ஜூலை, 2010
மரணப் பையில் மானுடம்
எங்கு பார்த்தாலும்
இலவச எமன்கள்
சிறியதும் பெரியதுமாய் வயிற்றை நிரப்பிக்
கொண்டு நம்முடன்
வந்துவிடுகின்றன !
இவை...
மலிவுப்பைகளாக
இருப்பதால் மரணப்பைகள் என்பதை மறந்துவிட்டோம்
இவைகளை
புதைத்துப் புதைத்து
புண்ணாகிப் போனது
பூமி
பூமியின் கருப்பைகள்
கருகிப்போன பிறகு
விதைகள் எப்படி
கண்விழிக்கும் ?
மரங்கள் மரித்துப்
போனால் மானுடம்
எப்படி வாழும் ?
பூமி பூக்காமல் போனால் புன்னகை
நமக்கேது ?
நாகரீகம் என்ற
பெயரில் பூமிக்கு
நஞ்சை எரிவதா ?
கவர்சிகளுக்காக
பூமியின் கண்களிள்
காளான்களை
விதைப்பதா ?
இது தொடர்ந்தால்...
நாளைய சந்ததி
வசந்த காலத்தை
வாழ்க்கையில் அல்ல
வரலாற்றில் மட்டுமே...
(பார்க்க) படிக்க முடியும்...!
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
இலவச எமன்கள்
சிறியதும் பெரியதுமாய் வயிற்றை நிரப்பிக்
கொண்டு நம்முடன்
வந்துவிடுகின்றன !
இவை...
மலிவுப்பைகளாக
இருப்பதால் மரணப்பைகள் என்பதை மறந்துவிட்டோம்
இவைகளை
புதைத்துப் புதைத்து
புண்ணாகிப் போனது
பூமி
பூமியின் கருப்பைகள்
கருகிப்போன பிறகு
விதைகள் எப்படி
கண்விழிக்கும் ?
மரங்கள் மரித்துப்
போனால் மானுடம்
எப்படி வாழும் ?
பூமி பூக்காமல் போனால் புன்னகை
நமக்கேது ?
நாகரீகம் என்ற
பெயரில் பூமிக்கு
நஞ்சை எரிவதா ?
கவர்சிகளுக்காக
பூமியின் கண்களிள்
காளான்களை
விதைப்பதா ?
இது தொடர்ந்தால்...
நாளைய சந்ததி
வசந்த காலத்தை
வாழ்க்கையில் அல்ல
வரலாற்றில் மட்டுமே...
(பார்க்க) படிக்க முடியும்...!
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
காற்றுள்ள போதே சுவாசித்துக் கொள்
அடுப்புப் புகைகளே
தாங்காத போது
ஆலைப் புகைகளின்
ஆக்கிரமிப்பு
ஓசோன்
மைல்கணக்கில்
மயாணமாகிப் போகியும் காற்றைக்
கொல்ல தினம் ஒரு
அவதாரம்...
புதிது புதிதாய்
ஆலைக்கழிவுகளால்
ஆற்றின் வயிறு
அழுகிவிட்டது
கரையின் கன்னங்களை
துடைத்துத் துடைத்து
கரையின் கைகள்
ஒய்ந்து விட்டன
இன்று...
ஆடிக்காற்றுக்கு
ஆஸ்துமா
கோடைக்காற்றுக்கு
கொலை மிரட்டல்
வாடைக்காற்றுக்கோ
வைரஸ் தாக்கல்
ஆம்
தென்றல் தேம்பித்
தேம்பி அழுகிறது
புயல் கூட புலம்பித்
தீர்க்கிறது
நாளைய செய்தி
காற்றுள்ளபோதே
துற்றிக்கொள் - அல்ல
"காற்றுள்ள போதே
சுவாசித்துக்கொள்"
தாங்காத போது
ஆலைப் புகைகளின்
ஆக்கிரமிப்பு
ஓசோன்
மைல்கணக்கில்
மயாணமாகிப் போகியும் காற்றைக்
கொல்ல தினம் ஒரு
அவதாரம்...
புதிது புதிதாய்
ஆலைக்கழிவுகளால்
ஆற்றின் வயிறு
அழுகிவிட்டது
கரையின் கன்னங்களை
துடைத்துத் துடைத்து
கரையின் கைகள்
ஒய்ந்து விட்டன
இன்று...
ஆடிக்காற்றுக்கு
ஆஸ்துமா
கோடைக்காற்றுக்கு
கொலை மிரட்டல்
வாடைக்காற்றுக்கோ
வைரஸ் தாக்கல்
ஆம்
தென்றல் தேம்பித்
தேம்பி அழுகிறது
புயல் கூட புலம்பித்
தீர்க்கிறது
நாளைய செய்தி
காற்றுள்ளபோதே
துற்றிக்கொள் - அல்ல
"காற்றுள்ள போதே
சுவாசித்துக்கொள்"
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
காற்றின் காதலனே... (அப்துல் கலாமுக்கு)
காற்றின் காதலனே
இந்தியர்களின் இதய
விஞ்ஞானியே !
உங்கள்அக்கினிச் சிறகுகளுக்குள்
அடைகாக்க
வைக்கப்பட்டுள்ளது
இந்திய இளைஞர் படை
ஒரு கலங்கரை
விளக்காக கண்களின்
ஒளியைக் கொடுங்கள்
பாரத இளைஞர்களின்
பயணம் தொடர
நீங்கள் வெடித்துக் காட்டிய பொக்ரான்
குண்டால் அகிலமே அரண்டு போனது
அது அமெரிக்க
காதுகளுக்கு இடியாய்ப் போனது
முதுபெரும் விஞ்ஞானியே !
எங்கள் மூத்த குடிமகனே !
உங்களுள் ...
அன்னையைப் பார்க்கிறோம்
ஆசானைப் பார்க்கிறோம்
தோழமையைப் பார்க்கிறோம்
உங்களுக்காக
ஆயிரமாயிரம்
இந்திய இளைஞர்கள்
கைகளில் பட்டம்,
கண்களில் கனவுகளுடன் தயார்
உங்களின்...
கனவினைக் கொடுங்கள்
கருத்தினைக்
கொடுங்கள்
கற்பனை கொடுங்கள்
கவியினைக்
கொடுங்கள்...
உங்கள்
இலட்சிய பாரதம்
நிச்சயம் நிரைவேறும்
இந்தியர்களின் இதய
விஞ்ஞானியே !
உங்கள்அக்கினிச் சிறகுகளுக்குள்
அடைகாக்க
வைக்கப்பட்டுள்ளது
இந்திய இளைஞர் படை
ஒரு கலங்கரை
விளக்காக கண்களின்
ஒளியைக் கொடுங்கள்
பாரத இளைஞர்களின்
பயணம் தொடர
நீங்கள் வெடித்துக் காட்டிய பொக்ரான்
குண்டால் அகிலமே அரண்டு போனது
அது அமெரிக்க
காதுகளுக்கு இடியாய்ப் போனது
முதுபெரும் விஞ்ஞானியே !
எங்கள் மூத்த குடிமகனே !
உங்களுள் ...
அன்னையைப் பார்க்கிறோம்
ஆசானைப் பார்க்கிறோம்
தோழமையைப் பார்க்கிறோம்
உங்களுக்காக
ஆயிரமாயிரம்
இந்திய இளைஞர்கள்
கைகளில் பட்டம்,
கண்களில் கனவுகளுடன் தயார்
உங்களின்...
கனவினைக் கொடுங்கள்
கருத்தினைக்
கொடுங்கள்
கற்பனை கொடுங்கள்
கவியினைக்
கொடுங்கள்...
உங்கள்
இலட்சிய பாரதம்
நிச்சயம் நிரைவேறும்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
செவ்வாய், 29 ஜூன், 2010
மரங்களைக் காப்போம் மானுடம் காப்போம்
என் மடியில் தான்
தூங்கினாய் ...என்
விரல்பிடித்துத் தான்
நடைபழகினாய்
உன் ஆரம்பக்கல்வி
என்னோடுதான் ...
விடுமுறை நாட்களில்
என்னுடன்விளையாட வருவாய் ...
ஒரு மழைக்காலத்தில்
என்னுடன் இருக்கும் போதுதான்
உன் காதலியை சந்தித்தாய்
திருமணத்திற்கு
பந்தற்கால் போட்டதிலிருந்து
வீட்டிற்கு வாசற்கால்
வைத்தது வரை
நான் தான்...
அறுபதுகளில்...
தனியாய் எங்கும்
போகமுடியாததால்
இரண்டாம் தாரமாய்
என்னை கட்டிக்
கொண்டாய்
உன் ...இருதி யாத்திரையிலும்
எனக்கு பங்குண்டு
இப்பொழுது கூட
உன்னையும் கேட்காமல் என்னையும் கேட்காமல்
உடன்கட்டை ஏற்றியிருப்பதும்
என்னைத்தான்...
நான்... நான்தான்
மரம் ...
மரங்களைக்
காப்போம் ...
மானுடம் காப்போம் ...
தூங்கினாய் ...என்
விரல்பிடித்துத் தான்
நடைபழகினாய்
உன் ஆரம்பக்கல்வி
என்னோடுதான் ...
விடுமுறை நாட்களில்
என்னுடன்விளையாட வருவாய் ...
ஒரு மழைக்காலத்தில்
என்னுடன் இருக்கும் போதுதான்
உன் காதலியை சந்தித்தாய்
திருமணத்திற்கு
பந்தற்கால் போட்டதிலிருந்து
வீட்டிற்கு வாசற்கால்
வைத்தது வரை
நான் தான்...
அறுபதுகளில்...
தனியாய் எங்கும்
போகமுடியாததால்
இரண்டாம் தாரமாய்
என்னை கட்டிக்
கொண்டாய்
உன் ...இருதி யாத்திரையிலும்
எனக்கு பங்குண்டு
இப்பொழுது கூட
உன்னையும் கேட்காமல் என்னையும் கேட்காமல்
உடன்கட்டை ஏற்றியிருப்பதும்
என்னைத்தான்...
நான்... நான்தான்
மரம் ...
மரங்களைக்
காப்போம் ...
மானுடம் காப்போம் ...
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
திங்கள், 28 ஜூன், 2010
தலைமுறை தாண்டிய உறவு
நீ...
உன் காதலியை விட
அதிகம் முத்தமிட்டது
என்னைத்தான்
உன்
கோபம் ... சோகம்
சிரிப்பு ... எதுவாயினும்
என்னோடுதான்
அன்னை சொல்லியும்
கேட்காமல்
முதலிரவுக்கு முன்பு
கூட என்னை
முத்தமிட்டுச்
சென்றவன் நீ
மனைவியைப் பிரிந்து
மூன்று நாட்கள்
இருக்க முடிந்த உனக்கு என்னைப்
பிரிந்து மூன்று மணிநேரம் முழுமையாய் இருக்க
முடியாது
இது கால் நூற்றாண்டை கடந்து
விட்ட உறவு
உன் இதயத்தை நீ
யார்யார்க்கோ
கொடுத்திருந்தாலும்
உன் சுவாசம் முழுவதும்
சுற்றிவருவது நான்
மட்டுமே
ஏனோ...
சில நாட்களுக்கு முன்
பேசிக்கொண்டிருக்கும்
போதே என்னைவிட்டு
பிரிந்து விட்டாய்
இருந்தும் ...
தலைமுறை தாண்டிய உறவாய் ...
உன்னைப் பார்த்தே
வளர்ந்த உன்
மகனின் கையில்
நான்... ... ...
சிகரட்
உன் காதலியை விட
அதிகம் முத்தமிட்டது
என்னைத்தான்
உன்
கோபம் ... சோகம்
சிரிப்பு ... எதுவாயினும்
என்னோடுதான்
அன்னை சொல்லியும்
கேட்காமல்
முதலிரவுக்கு முன்பு
கூட என்னை
முத்தமிட்டுச்
சென்றவன் நீ
மனைவியைப் பிரிந்து
மூன்று நாட்கள்
இருக்க முடிந்த உனக்கு என்னைப்
பிரிந்து மூன்று மணிநேரம் முழுமையாய் இருக்க
முடியாது
இது கால் நூற்றாண்டை கடந்து
விட்ட உறவு
உன் இதயத்தை நீ
யார்யார்க்கோ
கொடுத்திருந்தாலும்
உன் சுவாசம் முழுவதும்
சுற்றிவருவது நான்
மட்டுமே
ஏனோ...
சில நாட்களுக்கு முன்
பேசிக்கொண்டிருக்கும்
போதே என்னைவிட்டு
பிரிந்து விட்டாய்
இருந்தும் ...
தலைமுறை தாண்டிய உறவாய் ...
உன்னைப் பார்த்தே
வளர்ந்த உன்
மகனின் கையில்
நான்... ... ...
சிகரட்
--------------------------------------------------------------
Ovi Mail: Get mail on your mobile or the web
http://mail.ovi.com
புதன், 23 ஜூன், 2010
பகத்சிங்
இந்தநாள்... இயற்க்கை ஒரு சிவப்புச் சூரியனை சிறை எடுத்துக் கொண்டநாள்
இந்திய தாய்க்கு சுதந்தர பிரசவத்தின் சுகவலியை எடுக்கச் செய்தவனுக்கு இடுகாட்டில் படுக்கை விரித்த நாள்
23வயதில் இந்திய தாய்க்கு உயிர்தானம் செய்த உத்தமனனின் திருநாள்
இந்திய தாய்க்கு சுதந்தர பிரசவத்தின் சுகவலியை எடுக்கச் செய்தவனுக்கு இடுகாட்டில் படுக்கை விரித்த நாள்
23வயதில் இந்திய தாய்க்கு உயிர்தானம் செய்த உத்தமனனின் திருநாள்
--------------------------------------------------------------
Ovi Mail: Get mail on your mobile or the web
http://mail.ovi.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









