செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

இந்த மார்புக்
கச்சையை கண்டு
பிடித்த மாமனிதன்
ஆணாகவே இருக்க
வேண்டும்
ஏனென்றால்
அலைகளைக் கட்டிப்
போடும் அவசியம்
கடலுக்குத் தெரியாது

நீ போனபிறகும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது அந்த
இடத்தில் உன்
கொலுசு சத்தம்

உறக்கத்தை தேடி
கடிதம் போட்டேன்
ஆள் இல்லே என்று
செய்தி வந்தது

பூட்டிப் பூட்டி
வைத்தாலும்
தொலைந்துதான்
போகும் காற்றும்
காதலும்

உலகில் பொய்கலை
எல்லாம் ஒன்றாக
சேர்த்த போது ஒரு
பெண்ணின் புன்னகை
கிடைத்தது
ஏமாற்றங்களை
எல்லாம் ஒன்றாய்
சேர்த்த போது ஒரு
ஆணின் கண்ணீர்
கிடைத்தது

சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறது
காற்றும் என் காதலும்

மண்ணைப்
பிசைந்தால் பாண்டம்
மனசைப் பிசைந்தால்
காதல்

மூச்சு முட்ட கவிதை
தின்றுவிட்டு
படுத்துப் புரண்டு
கொண்டிருக்கும்
பல்கலைக்கழகம் நீ

(தொடரும்)

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

சில்மிசியே கவிதை
தொகுப்பில் இருந்து
தொகுக்கப்பட்டவை

நெருப்பிற்கு ருசி
உண்டு உன்
இதழ்களைக் கொடு
ருசிக்கிறேன்

ஃ கடல் உன்மார்பு
அதனால்தான்
கரையோரம்
தளும்புகிறது

ஃ லட்சக்கணக்கான
வீரர்களுக்கு முன்
ஒருவனாய்
உனக்கு முன் நான்

ஃஉன் ஆனவத்தை
விட அழகானது
உன்னிடம் எதுவும்
இல்லை

ஃ ஒர் அரங்கமே
கை தட்டியது போல்
இருந்து நீ இமைகளை தட்டியதும்

ஃ நீயும் நானும்
சேர்ந்தால் அது இயல்
இசை நாடகம் அல்ல
இதழ் இசை நாடகம்

ஃ இலக்கணம் மீராத
உன் இளமைக்கனம்
வாழ்க

ஃ காற்றும் காதலும்
சன்னல் வழி
வருகிறது கதவுவழி
சென்றுவிடுகிறது

ஃ இளமைப் படகே
உன்னால் கவிழ்ந்த
நதி நான்

ஃ முடிந்தால் வந்து
பார்த்து விட்டுப் போ
இறந்து கிடக்கும்
என் அமைதியை

ஃ கிளைகளை மூடும்
அவசரத்தில் கனிகளை
இலேசாய்
தெரியவிட்ட அப்பாவி
மரம் நீ

ஃ முன்
அறிவிப்பில்லாத
யுத்தங்களை உன்
முந்தானைகள்
செய்கின்றன

ஃ நீ உலக அதிசயம்
அல்ல உலக ரகசியம்

ஃ நீ பல்கலைக் கழகம்
அல்ல
கள்கலைக்கழகம்

ஃ காய்சல் அடிக்கிறது
ஒரு டீஷ்பூன் வெட்கம்
தா

ஃ உற்பத்தியான இடத்திற்கே திரும்பத்
திரும்ப வரும் நதி
காதல்தான்

ஃ உன் நெற்றியில்
முத்தங்களை
பயிரிட்டேன்
கண்ணங்கள்
வெட்கத்தை
அறுவடை
செய்கின்றன

ஃ மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழவகைகள்
உன்னிடம் மட்டுமே
உண்டு

ஃ எப்படியாவது இன்று
இரவு கண்டுபிடித்து
விட வேண்டும்
வெட்கம் உன்
உடம்பில்
ஆரம்பிக்கும் இடத்தை

ஃ இலேசான
இதயங்களில் தான்
கனமான காதல்
தோன்றுகிறது

ஃ நீ மேற்கின்
சிவப்பில் கிடைத்த
சிவப்பு

ஃ தராசுத் தட்டில் என்
ஆயிரம் இரவுக்
கண்ணீரை
வைத்தேன் நீ மறு
தட்டில் ஒரே ஒரு
புன்னகையை
வைத்தாய் சமம்

ஃ சொர்கத்தை ரசிக்கும்
திருட்டு வழி
உன் படுக்கை அறை
ஜன்னல்

ஃ நஞ்சும் காதலும்
தலைக்கு
ஏறிவிட்டால்
இறங்காது

ஃ நீ எனக்கு குளிர்கால
கூட்டத் தொடர்

ஃ ஒரு பெண்ணின்
இடையின் சுற்றளவும்
ஆனின் கைநீளமும்
ஒன்று

ஃ ஆள் கொல்லி
மிருகங்கள் காட்டில்
திரிகின்றன
உயிர் கொல்லி
மிருகங்கள்
தாவணியில்
திரிகின்றன

ஃஇரட்டை ஜடை
துப்பாக்கியே உன்
தோட்டாக்கள் என்ன
மல்லிகை
மொட்டுகளா

ஃ உடம்பை மறைக்க
உடை கண்டு
பிடித்தவனை விட
எதை எதை
மறைக்க வேண்டும்
என்று கண்டவனே
ரசனாவாதி
(தொடரும்)

காதல் கவிதைகள்

இந்த இரவையே
உனக்கு கடிதமாக
அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா
-பழநிபாரதி

பகலெல்லாம் உன்னை
ஒளிப்பதிவு
செய்கிறது சூரியன்.
இரவில் ...
ஒளிபரப்புகிறது
நிலவாக
-கட்டளை ஜெயா

முத்தத்தைப் பருகி
மட்டுமே உயிர்வாழ
முடியுமா என்ன
காதலில் முடியும்

தேவதைக்கும்
இராட்சசிக்கும்
ஒற்றுமைகள்
உண்டென்று
கூறினால்
காதலிக்காதவர்கள்
நம்பமாட்டார்கள்
-விஜய் மில்டன்

சனி, 25 செப்டம்பர், 2010

நா.முத்துக்குமார் கவிதைகள்

பதின்வயதில் முதல்முறை ஓர்
பேய் பிடித்து ஆட்டுவது

நதிநீரில்
வலைவிரித்து
விண்மீன்கள்
மாட்டிவது

ரதி என்றும் ரம்பை
என்றும் ராப்பகலாய்
புலம்புவது

அதிகாலை அலாரம்
வைத்து விழித்திருந்து
நிறுத்துவது

மதில்சுவர்
நண்பர்களை
மறைந்திருந்து
கழட்டுவது

குதிரினிலே நெல்லை
போல் வார்த்தைகளை
நிரப்புவது
எதிரினிலே பார்த்து
விட்டால் வழக்கம்
போல் சொதப்புவது

பதில் தெரியா
கேள்வியுடன் பல
கடிதம் நீட்டுவது

முதிர்கண்ணன் ஆன பின்பும் முதல்
தழும்பை போற்றுவது
ஃஃஃஃ அதுதாம்பா ஃஃஃ ஃஃஃஃஃ காதல் ஃஃஃஃஃஃ
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 16 செப்டம்பர், 2010

புதன், 15 செப்டம்பர், 2010

தீட்டத்தீட்ட

தீட்டத்தீட்ட
விலை ஏறுவது
வைரம் மட்டுமல்ல
அங்காடி அரிசியும்
தான்

( கல்லச்கந்தையில் தீட்டப் பட்ட அங்காடி
அரிசி கிலோ
15ரூபாய் )

வியாழன், 2 செப்டம்பர், 2010

தெளிந்த நல்நீரும் காற்றும்

நாகரீகச் சேறு வழுக்கி
நவீனப் பள்ளத்தாக்கில்
விழுந்து மரணத்தோடு
போராடும் மனிதனுக்கு
அவசரத்தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

கூவ நீருக்கும்
குழாய் நீருக்கும்
தற்சமயம் நிறபேதம்
மட்டும் தான்
இனி குடிமட்டுமல்ல
குடிநீரும் குடியைக்
கெடுக்கும்

கந்தகமும்
கரியமிலமும் காற்றோடு
கலப்புமணம்
புரிந்ததால்
சுத்தக்காற்று
வார்த்தையில் மட்டும்

இனி காச நோயினும்
காற்று நோய்
கொடியது

நிக்கோடினால்
தேய்பிறையான
நுரையீரலுக்ககும்
ஒளிச்சேர்க்கைக்கும்
கூட திறனிழந்த
இளந்தளிர்களுக்கும்
அவசியத் தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

எழுதியது .
பள்ளித்தேழன்
கு.கண்ணன்
( தீயனைப்புத்துறை
காவலர் )

கவிஞர் வாலி கவிதைகள்

மலைகள் மண்
மாதாவின் மார்பகங்கள் ...

இவ்வளவு பெரியதா ?
என்று ஆச்சிரியப்பட
வேண்டாம்

எவ்வளவு
மேகக் குழந்தைகள்
அத்தனைக்கும்
பாலுட்ட வேண்டாமா ?