புதன், 14 செப்டம்பர், 2011

1929 ல் பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது பற்றி அப்போது ஆனந்த விகடன் எழுதிய கட்டுரை

பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத்
என்பவரும் திட்டமிட்டபடி, 1929
ஏப்ரல் மாதம் 8ம்
திகதியன்று சட்டசபையில்
குண்டுகளை வீசிவிட்டு, ‘இ;ன்குலாப்
ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டார்கள்.
இந்திய அரசியல் வரலாற்றில் இந்த
முழக்கம் அன்றுதான்
முதல்முறையாகக கேட்டது. பின்னர்
கையிலிருந்த துப்பாக்கியால்
மேல்நோக்கிச் சுட்டுவிட்டு,
ர்.ளு.சு.யு யின்
துண்டறிக்கைகளை வீசி எறிந்தார்கள்.
பிறகு தாங்களாகவே முன்வந்து கைதாகினார்கள்.
இன்று பகத்சிங்கைப்
புகழ்ந்து எழுதுகின்ற ஆனந்தவிகடன்
பத்திரிகை அன்று பகத்சிங்கின் இந்த
நடவடிக்கை குறித்து என்ன
எழுதியது தெரியுமா? நேயர்களே,
1929ம் ஆண்டு (அப்போது மாத
இதழாக வெளிவந்த ஆனந்தவிகடனின்)
மே மாத இதழில், பகத்சிங்கின்
செய்கையைக் கண்டித்தும்,
கேலி செய்தும் வெளியான
அக்கட்டுரையின்
ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
“இரண்டு இளைஞர்கள் திடீரென
எழுந்து இரண்டு அசல்
வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு,
கைத்துப்பாக்கிகளால்
ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம்.
இந்த இளைஞர்கள் இருவருக்கும்
முழுமூடச்சிகாமணிகள்’ என்ற
பட்டத்தை விகடன் அளிக்க
விரும்புகின்றான். முதலாவதாக,
மகாத்மாவின் சத்தியாக்கிரகப்
பீரங்கியினால் தகர்க்க முடியாத
அதிகாரவர்க்கத்தை வெங்காய
வெடியினாலும், ஓட்டைத்
துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள்
எண்ணியது மூடத்தனம். . . இந்திய
குடியரசின் சேனாதிபதி என்பதாகக்
கையொப்பமிட்டு, சிரிப்பதற்கு விடயம்
தந்ததின் பொருட்டு விகடன் மிகவும்
நன்றி செலுத்துகின்றான்.
(ஆனந்தவிகடன்-1929 மே இதழ்)
ஆனால் பகத்சிங் அவர்களும்
பட்டுகேஸ்வர் தத் அவர்களும் கொடுத்த
வாக்குமூலத்தைக் கேளுங்கள்
நேயர்களே!
“நாங்கள் வெடிகுண்டு எறிந்தோம்.
எந்தத் தனிநபரையும் நோக்கி நாங்கள்
வெடிகுண்டு போடவில்லை.
சட்டசபை பயனற்றது என்று கருதி அதன்மீது போட்டோம்.
சட்டசபை இருந்து என்ன பயன்?
மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகள்
அசட்டை செய்யப்படுகின்றன.
சட்டசபையினால் யாதொரு நன்மையும்
கிடையாது. ஏழைமக்கள் படும்துயர்
சொல்லி முடியாது. இங்கிலாந்தைக்
கனவிலிருந்து தட்டி எழுப்ப
வேண்டுமென்றால்
வெடிகுண்டு போடவேண்டியதுதான்!. . .
கொலை செய்யவேண்டும்
என்று எண்ணியிருந்தால்
அவ்விதமே செய்திருப்போம். அநீதியாக
உள்ள தற்கால சமூகவாழ்வையும்,
அரசியலையும்
போக்குவதே புரட்சியாகும்…. . .
ஒரு மனிதனின் நலத்தை, மற்றொருவன்
பறிப்பதும் ஒரு தேசத்தின்
நலத்தை மற்றொரு தேசம் பறிப்பதும்
ஒழிய வேண்டும்.. . . நாங்கள்
எச்சரிக்கை செய்துள்ளோம். இந்த
எச்சரிக்கை மதிக்கப்படாமல் போனால்,
தேசத்தில் பெரிய புரட்சி தோன்றும்.
அக்காலத்தை, நாம் எதிர்பார்க்கின்றோம்.
புரட்சி என்ற பலிபீடத்தில்
எங்களது இளமையை நாங்கள்
அர்;ப்பணிக்கின்றோம். எத்தகைய கஷ்ட
நஷ்டம் நேரினும் சரி,
அதனை அனுபவிக்க நாங்கள் தயார்.
‘புரட்சி ஓங்குக! புரட்சி ஓங்குக!’
எவ்வளவு தெளிவாக, தீர்க்கமான,
வீரமான வாக்குமூலம்! இந்த
வீரமிகு செயலைத்தான்
ஆனந்தவிகடன் பத்திரிகை கிண்டல்
செய்து எழுதியது.

நன்றி
tamilnation.org
இந்த கட்டுரையின் ஆசிரியர்
சன்முகம் சபேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக