வியாழன், 8 ஜூலை, 2010

காதல்

நீ...
ஒரு துளை கொண்ட
புல்லாங்குழல்

ஈரிதழ் கொண்ட
தாமரை

மூவுலகையும் என்
கையில் தந்த
தேவதை


நான்கு திசைகளிலும்
ஒளிர்கின்ற
நிலவு


ஐந்து பூதங்களையும்
விழுங்கி விடும்
அழகிய பனித்துளி

என் கனவு
டெல்டாக்களில்
கவிதை
விளைவிக்கின்ற
ஆறு

... ... ...


ஒரு புல்லாங்குழல்
இதழ் வாசிக்கிறது

புரியவில்லையா ?

நீ...
என்னை
முத்தமிடுகிறாய் !
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக