நூலகம் இன்னும்
விற்கப்படாத விலை
போகாத புத்தகம்
என் அப்பனின் இரவுக்
கவிதையின் முதல்
பதிப்பு சந்தைக்கு
வந்து முழுமையாக
முப்பதாகிறது
தினம் தினம் எங்கள்
வீட்டில் ...
கண்காட்சி வருகிற
விழிகள் எல்லாம்
உருட்டியும் புரட்டியும்
பார்க்கும்
பாட்டு படிப்பு பண்பு
என்பது பவுனில்
வந்து முடியும்
ஐம்பது நாற்பது
முப்பது இருபது
இனியும் முடியாது
எழுந்திரு
என் திருமணச்
சேமிப்பிற்காக எங்கள்
வீட்டு வயிறுகள்
பசிக்கு பட்டினியையே
செரித்து வளர
பழகிவிட்டன
ஆகையால் அவை
உண்ணா விரதம்
என்பதை ஒரு நாளும்
உச்சரித்தது இல்லை
எனக்காக அவிழ்த்த
கோவணத்தை என்
அப்பன் இன்னும்
கட்டவில்லை
அருணாக்கயிற்றை
அடமானம்
வச்சுத்தான்
மூன்றாம் வருடத்
தேர்வை முழுசா
எழுதினேன்
இனியும் தட்சணை
கொடுத்து தாரமாக்க
அப்பனுக்கோ
வக்கனை இல்லை
ஆகையால்
இன்னும் சில
நாட்களில்
அறுபதுக்கோ ... எழுபதுக்கோ ...
நாளைய பிணத்திற்கு
இன்றே
மலர்வளையமாக
நான் மாறக்கூடும்
அங்கேயும் வந்து
மொய் எழுதி ...
முதலிரவு
ஆலோசனை கூறாமல்
உங்கள் எதிர்
வீட்டிலும் என்னைப்
போல் இன்னொருத்தி அவளது முகம்
பார்த்தே
கண்ணாடியின் பாதரசம் பழுதடைந்து
கொண்டிருக்கலாம்
அவளை முதலில் .!
கரையேற்றுங்கள் ...
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com
ஆலோசனை-ன்னு தலைப்பிட்டு
பதிலளிநீக்குஆழ்ந்த வரிகளால் அழகிய
கவிதை வரிகள் - அருமை.
அருமையான கவிதை
பதிலளிநீக்கு