யார் அவள் வந்தாள்
இதயத்தில்
நுழைந்தாள்
மறுசென்மம் தான்
கொடுத்தாள்
கரம் ஒன்று
கொடுத்தாள்
கவிதையாய்
நிலைத்தாள் என்
கனவினை ஏன்
பறித்தாள்
உறக்கங்கள்
இல்லாமல் உனைக்
கண்கள் தேடுதே
உடலோடு உயிர் சேர
ஒப்பந்தம் போடுதே
தொடுவானம்
நீள்கிறதே மழைமேகம்
சூழ்கிறதே உன்னை
நான் காண்கையிலே
காதலே நில்லடி என் கவிதைகள் உன்காலடி
அதன் வார்த்தையாய்
வாழ்வதும் நீயே நீயே
தொடுவானிலே உள்ள
மேகமும் தொலை
துரமே செல்லும்
போதிலும் ஒரு
தாகமாய் கடலேயே
தேடும் தேடும்
உச்சி வெயிலின்
ஒளியில் கூட நிழலும்
இங்கே நீளுதடி
என்னை நீயும்
பிரியும்வேலை
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இளைய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி சாகுதே
யார் அவள் வந்தாள்
... ... ...
உன்னையே
பார்க்கிறேன்
உரிமையாய்
கேட்கிறேன் என்
வாழ்க்கையின்
கவிதையாய் நீயே
வேண்டும் வேண்டும்
மரணமே நேரினும்
உன் மடியையே
கண் தேடிடும்
என் காதலை உன்
கண்கள் மறுத்தால்
என் கல்லரை
பூ பூத்திடும்
கண்களைத் திறந்தும்
கனவுகள் வந்தாள்
கவிஞனின் தாகம்
தீராது
இரவுகள் வந்தும்
இமைகள மறுக்க
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இனிய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி வாடுதே ...
புதன், 25 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக