புதன், 18 ஆகஸ்ட், 2010

முத்தம் திண்ணும் மோகினி ...

அன்றொரு நாள் நீ
ஒரு போட்டி வைத்தாய் ...

" சத்தம் இல்லாமல்
பத்து முத்தம் பதமாக
தரவேண்டும் .
முத்தமிடும் போது
சத்தம் வந்து விட்டால்
தண்டனையாக
தோற்றவர்
வென்றவர்க்கு நுறு
முத்தங்கள் தர
வேண்டும் " என்ன
சரியா என்றாய்


கரும்பு திண்ணக் கூலியா ம் ம் ம் என்று
தலையாட்டினேன்

முதலில் நீ என்றாய்
சரி என்று முதல்
முத்தம் நெற்றி
இரண்டாவது இடக்கண், வலக்கண்
மூன்று , நான்கு நாசி
ஐந்து வலக்கண்ணம்
ஆறு இடக்கண்ணம்
ஏழு காது மடல்
எட்டு கூந்தல்
ஒன்பது கவிதை
என்று பத்தாவது
முத்தத்தை பதமாக
இறக்க இதழிடம்
வந்தேன் ...


வந்து இதழோடு
இதழ் பதிக்க
ச்... ...

ஐயய்யொ சத்தம்
வந்திடுச்சு என்று
கையை உதரிக்
கொண்டு சிரித்தாய்

என்னால் சத்தம் வர
வில்லை இல்லை
என்றேன்

அதெல்லாம் எனக்கு
தெரியாது பந்தயப்படி
நூற குடுத்துட்டுப் போ

சரி என்று
நூறு கொடுத்து விட்டு
இளைப்பாறலாம்
என்று நினைக்க

எங்க போற
நூறு எங்க என்றாய்

இப்ப தான்டி
கொடுத்தேன்

அது நீ தோத்ததுக்கு
இப்ப கோட்பது
நான் வெற்றி
பெற்றதர்க்கு

அன்று முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது


என்னடி நூறு நூறா
நொருக்குர
எனக்கு தான்
நொருக்கு தீணீணா
ரொம்ப பிடிக்கும்னு
உனக்கே தெரியுமே
என்றாய் ... ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக