செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இரத்தம் குடிக்கும் மனிதர்கள்

நவீன உலகத்தில்
ஆடு மாடுகளை விட
அதிகம் அடிமைப்
படுத்தப்படுவது
தொழிலாளர்கள் தான்
நொடிக்கு நொடி
ஒவ்வொரு தொழிலாளியின்
இரத்தமும் வியர்வையும்
உறிஞ்சப்படுகிறது
அதைப்பற்றிய கவிதை
இதோ

வேலை தர
முதன் முதலில்
முதலாளி கோரியது
என் சிறகுகளில்
இருந்து சில
இறகுகளை

வேலைக்கு சேர்ந்த
சில நாட்களில்
என்னைப் பாராட்டி
இரண்டு இறகுகளை
வாங்கிக் கொண்டார்

சில மாதங்களுக்குப்
பிறகு சில சூழ்நிலை
களை முன் வைத்து
மூன்று இறகுகளை
பெற்றுக் கொண்டார்

பின்னொரு நாள்
வேலையை
தக்கவைத்துக் கொள்ள
வேண்டுமாயின்
சில இறகுகள்
வேண்டுமென்று
மறைமுகமாய் மிரட்டி
பிடுங்கிக் கொண்டார்

சிறகுகளற்ற நான்
உயரத்தில் பறக்கும்
முதலாலியைப்
பார்க்கிறேன்
என் இறகொன்றால்
தன் காது குடைந்தபடி
அவர்
இறகேதும்
முளைத்துள்ளதா
எனக் குனிந்து
என்னைப் பார்க்கிறார்
-ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக