புதன், 15 செப்டம்பர், 2010

தீட்டத்தீட்ட

தீட்டத்தீட்ட
விலை ஏறுவது
வைரம் மட்டுமல்ல
அங்காடி அரிசியும்
தான்

( கல்லச்கந்தையில் தீட்டப் பட்ட அங்காடி
அரிசி கிலோ
15ரூபாய் )

வியாழன், 2 செப்டம்பர், 2010

தெளிந்த நல்நீரும் காற்றும்

நாகரீகச் சேறு வழுக்கி
நவீனப் பள்ளத்தாக்கில்
விழுந்து மரணத்தோடு
போராடும் மனிதனுக்கு
அவசரத்தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

கூவ நீருக்கும்
குழாய் நீருக்கும்
தற்சமயம் நிறபேதம்
மட்டும் தான்
இனி குடிமட்டுமல்ல
குடிநீரும் குடியைக்
கெடுக்கும்

கந்தகமும்
கரியமிலமும் காற்றோடு
கலப்புமணம்
புரிந்ததால்
சுத்தக்காற்று
வார்த்தையில் மட்டும்

இனி காச நோயினும்
காற்று நோய்
கொடியது

நிக்கோடினால்
தேய்பிறையான
நுரையீரலுக்ககும்
ஒளிச்சேர்க்கைக்கும்
கூட திறனிழந்த
இளந்தளிர்களுக்கும்
அவசியத் தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

எழுதியது .
பள்ளித்தேழன்
கு.கண்ணன்
( தீயனைப்புத்துறை
காவலர் )

கவிஞர் வாலி கவிதைகள்

மலைகள் மண்
மாதாவின் மார்பகங்கள் ...

இவ்வளவு பெரியதா ?
என்று ஆச்சிரியப்பட
வேண்டாம்

எவ்வளவு
மேகக் குழந்தைகள்
அத்தனைக்கும்
பாலுட்ட வேண்டாமா ?

புதன், 25 ஆகஸ்ட், 2010

தனிமை தீவில் ...

யார் அவள் வந்தாள்
இதயத்தில்
நுழைந்தாள்
மறுசென்மம் தான்
கொடுத்தாள்

கரம் ஒன்று
கொடுத்தாள்
கவிதையாய்
நிலைத்தாள் என்
கனவினை ஏன்
பறித்தாள்

உறக்கங்கள்
இல்லாமல் உனைக்
கண்கள் தேடுதே
உடலோடு உயிர் சேர
ஒப்பந்தம் போடுதே

தொடுவானம்
நீள்கிறதே மழைமேகம்
சூழ்கிறதே உன்னை
நான் காண்கையிலே

காதலே நில்லடி என் கவிதைகள் உன்காலடி
அதன் வார்த்தையாய்
வாழ்வதும் நீயே நீயே

தொடுவானிலே உள்ள
மேகமும் தொலை
துரமே செல்லும்
போதிலும் ஒரு
தாகமாய் கடலேயே
தேடும் தேடும்

உச்சி வெயிலின்
ஒளியில் கூட நிழலும்
இங்கே நீளுதடி
என்னை நீயும்
பிரியும்வேலை
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இளைய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி சாகுதே

யார் அவள் வந்தாள்
... ... ...


உன்னையே
பார்க்கிறேன்
உரிமையாய்
கேட்கிறேன் என்
வாழ்க்கையின்
கவிதையாய் நீயே
வேண்டும் வேண்டும்

மரணமே நேரினும்
உன் மடியையே
கண் தேடிடும்
என் காதலை உன்
கண்கள் மறுத்தால்
என் கல்லரை
பூ பூத்திடும்

கண்களைத் திறந்தும்
கனவுகள் வந்தாள்
கவிஞனின் தாகம்
தீராது
இரவுகள் வந்தும்
இமைகள மறுக்க
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இனிய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி வாடுதே ...

புதன், 18 ஆகஸ்ட், 2010

முத்தம் திண்ணும் மோகினி ...

அன்றொரு நாள் நீ
ஒரு போட்டி வைத்தாய் ...

" சத்தம் இல்லாமல்
பத்து முத்தம் பதமாக
தரவேண்டும் .
முத்தமிடும் போது
சத்தம் வந்து விட்டால்
தண்டனையாக
தோற்றவர்
வென்றவர்க்கு நுறு
முத்தங்கள் தர
வேண்டும் " என்ன
சரியா என்றாய்


கரும்பு திண்ணக் கூலியா ம் ம் ம் என்று
தலையாட்டினேன்

முதலில் நீ என்றாய்
சரி என்று முதல்
முத்தம் நெற்றி
இரண்டாவது இடக்கண், வலக்கண்
மூன்று , நான்கு நாசி
ஐந்து வலக்கண்ணம்
ஆறு இடக்கண்ணம்
ஏழு காது மடல்
எட்டு கூந்தல்
ஒன்பது கவிதை
என்று பத்தாவது
முத்தத்தை பதமாக
இறக்க இதழிடம்
வந்தேன் ...


வந்து இதழோடு
இதழ் பதிக்க
ச்... ...

ஐயய்யொ சத்தம்
வந்திடுச்சு என்று
கையை உதரிக்
கொண்டு சிரித்தாய்

என்னால் சத்தம் வர
வில்லை இல்லை
என்றேன்

அதெல்லாம் எனக்கு
தெரியாது பந்தயப்படி
நூற குடுத்துட்டுப் போ

சரி என்று
நூறு கொடுத்து விட்டு
இளைப்பாறலாம்
என்று நினைக்க

எங்க போற
நூறு எங்க என்றாய்

இப்ப தான்டி
கொடுத்தேன்

அது நீ தோத்ததுக்கு
இப்ப கோட்பது
நான் வெற்றி
பெற்றதர்க்கு

அன்று முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது


என்னடி நூறு நூறா
நொருக்குர
எனக்கு தான்
நொருக்கு தீணீணா
ரொம்ப பிடிக்கும்னு
உனக்கே தெரியுமே
என்றாய் ... ...

இத முதல்ல பாருங்க ...


எனக்குள்ள ஒரு மிருகம்
இருக்கேன்ள பாத்தீங்களா


என்ன ...
சுகமா இருக்குயா


புலி வருது
புலி வருது ...


இந்த சூனாபானா
எவ்வளவு சூட்டிப்புனு
இப்ப தெரியுதா


ஐ லவ்யூடா
செல்லம்


எங்க எல்லோரும்
ஒரு முற பல்ல
காட்டுங்க


ஒரே .!
கே...ரா இருக்குப்பா


என்ன பன்றது
பயபுள்ள ஒன்னும்
மடிய மாட்டீங்குது


இவங்க இப்படித்தா
நீங்க வாங்க வேற
என்ன வச்சிருக்கான்னு
பாக்கலாம் .

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மறந்தேனே ...

உன்னை மட்டும்
நினைத்தேன்
உயிருக்குள்
விதைத்தேன் என்
நிழலையும் இன்று
தொலைத்தேன்

கண்கள் என்னை
விழுங்க கை
வளையல் குழுங்க
என் கனவினை
மென்று திண்று இன்று
செரித்தாய்

சூரியனும் இனிக்கும்
சந்திரனும் கொதிக்கும்
உன் முகத்தை பார்த்து
விட்டால் எனக்கோ
நெஞ்சுக்குள்ளே
தீப்பிடிக்கும்

ஒத்திகை நூறு பார்த்து
காதலைச் சொல்ல
வந்தேன்
உன் கண்கள் கண்ட
நேரம் மறந்தேனே ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வம்புத்தேன் ...

நண்பர்களுடன்
நாம் இருக்கும் போது
" என்னடா உன்உதடு
வர வர ...
சிவப்பாயிட்டே போகுது " என்று ஒரு
நண்பன் கேட்டுவிட்டான்
அவனை சமாளிக்க

தேன் குடித்தால்
இப்படித்தான் ஆகும்
என்றேன்
தேன் குடித்தாலா ... ?
( அவன் விடுவதாக
இல்லை )

வம்புத்தேன் குடித்தால்
இப்படித்தான் ஆகும்
என்றேன்
வம்புத்தேனா ... ?

எல்லோரும் குழம்பிப்
போய் போதுமடாசாமி என்று தலையில் கை
வைத்துக்
கொண்டார்கள்

நீ மட்டும் ...
வெட்கத்தில் நெஞ்சில்
கை வைத்துக்
கொண்டாய் .

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கவிதையும் ... கண்ணீரும் ...

உன்னைப் போன்ற
தேவதைகளைப் பார்த்து ...
என்னைப் போன்ற
இதயங்கள் புலம்பிய
புலம்பலில் இருந்து
தோன்றியது தான்
மொழி


காதலியின் ...
புன்னகை , மௌனம்
இரண்டின்
அர்த்தங்களை தேடித்
தேடி செய்யப்பட்ட
ஆராய்சிகளின்
தொகுப்பு தான்
அகராதி

அப்படியானால்
கவிதையும் ... கண்ணீரும் ...?

அவை காதலின்
வேதங்கள் .

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

அலைபேசியில் தமிழில் செய்திகளை படிக்க !

நீங்கள் அலைபேசியில் GPRS
உபயோகிப்பவரா ? இனைய செய்திகளை
தமிழில் படிக்க வேண்டும் என்கிற ஆதங்கம் உள்ளவரா ?

நீங்கள் எந்த நிறுவன
தயாரிப்பு அலைபேசி
வைத்திருந்தாலும்
கவலைப்பட தேவையில்லை

முதலில்opera mini
மென்பொருள் உள்ளதா
என்று பாருங்கள் .
இல்லை என்றாள்
மென்பொருளை
இறக்குங்கள் .

பிறகு கீழே சொல்லப்படும் வழி
முறையை சரியாக
பின்பற்றுங்கள்

முதலில்
opera mini
browser ல் நுழைந்து பின்
web address
அடிக்கும் இடத்தில்
உள்ள WWW. ஐ
நீக்கி விட்டு
opera:config
என்று அடித்து ok
கொடுக்கவும்

இப்போது
opera mini seting
வரும் இதில் கடைசிக்கு முன்
use bitmap fonts
for complex scripts என்று
இருக்கும் இடத்தில்
yes என்று பதிவு
செய்யவும்

பிறகு save ல் சென்று save என்று
பதிவு செய்யவும்
பிறகு வெளியேறவும்

இப்போது இனையதள
முகவரி அடிக்கும்
இடத்தில் ஏதேனும்
தமிழ் இனைய முகவரி அடியுங்கள்
உதாரனம் (WWW.tamilyale.
blogspot.com)
உங்கள்
அலைபேசியில்
இப்போது தமிழ் எழுத்துக்கள் வருவதை காணலாம்
( இதற்கு முன் தமிழ்
எழுத்துக்கள் கட்டங்
கட்டமாக வரும் )

இந்த தகவலை
எனக்குச் சொன்னவர்
தோழர் தமிழ் மீரான் .

நீங்கள் அவருக்கு
நன்றி
கூறுவதானால்
கருத்துரையில் பதிவு
செய்யுங்கள்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

சூரியனைச் சுட்ட நெருப்பு (பாரதி ...)

பாரதி ... நீ
சூரியனைச் சுட்ட நெருப்பு- புயலை எரித்த புதுத் தென்றல்
மலையை உடைத்து எரிந்த தமிழ் உளி

நீ ... உன் எழுத்து ஏவுகணைகளை ஏந்தியபோதுதான் அந்த பருத்த பீரங்கிகளுக்கும் பயம்வந்தது

கருவை மட்டும் சுமந்த எங்கள் பெண்கள் கவியை சுமந்ததும்உன்னாள் தான்

தமிழ் தாயும் மார்தட்டிக்
கொள்கிறாள் உன்னாள் தமிழ்பபாலை எங்களுக்கு முலை ஊட்டியதற்காக

உன் கனல் வரிகளைக்
கொஞ்சம் கடன் கொடுப்பாயா எங்கள் உரிமைக்கூழ் காய்ச்ச உலை வைக்க வேண்டும்.

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

புதன், 28 ஜூலை, 2010

முதலிரவு ஆலோசனை ...

நான் ஒரு கன்னிமாறா
நூலகம் இன்னும்
விற்கப்படாத விலை
போகாத புத்தகம்

என் அப்பனின் இரவுக்
கவிதையின் முதல்
பதிப்பு சந்தைக்கு
வந்து முழுமையாக
முப்பதாகிறது

தினம் தினம் எங்கள்
வீட்டில் ...
கண்காட்சி வருகிற
விழிகள் எல்லாம்
உருட்டியும் புரட்டியும்
பார்க்கும்

பாட்டு படிப்பு பண்பு
என்பது பவுனில்
வந்து முடியும்

ஐம்பது நாற்பது
முப்பது இருபது
இனியும் முடியாது
எழுந்திரு

என் திருமணச்
சேமிப்பிற்காக எங்கள்
வீட்டு வயிறுகள்
பசிக்கு பட்டினியையே
செரித்து வளர
பழகிவிட்டன

ஆகையால் அவை
உண்ணா விரதம்
என்பதை ஒரு நாளும்
உச்சரித்தது இல்லை

எனக்காக அவிழ்த்த
கோவணத்தை என்
அப்பன் இன்னும்
கட்டவில்லை

அருணாக்கயிற்றை
அடமானம்
வச்சுத்தான்
மூன்றாம் வருடத்
தேர்வை முழுசா
எழுதினேன்

இனியும் தட்சணை
கொடுத்து தாரமாக்க
அப்பனுக்கோ
வக்கனை இல்லை

ஆகையால்
இன்னும் சில
நாட்களில்
அறுபதுக்கோ ... எழுபதுக்கோ ...

நாளைய பிணத்திற்கு
இன்றே
மலர்வளையமாக
நான் மாறக்கூடும்

அங்கேயும் வந்து
மொய் எழுதி ...
முதலிரவு
ஆலோசனை கூறாமல்

உங்கள் எதிர்
வீட்டிலும் என்னைப்
போல் இன்னொருத்தி அவளது முகம்
பார்த்தே
கண்ணாடியின் பாதரசம் பழுதடைந்து
கொண்டிருக்கலாம்

அவளை முதலில் .!
கரையேற்றுங்கள் ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 27 ஜூலை, 2010

இத முதல்ல பாருங்க ...


என்ன என் கண்ண
பாத்து மயங்கீட்டீங்களா


இப்பவே
கண்ணக் கட்டுதே ...


மட்டமான சரக்க
குடுத்து ஏமாத்தீட்டாங்கயா
இல்லனா நாங்களாவது
மட்டயாவதாவது


இந்தக் கோட்டத் தான்டி
நீயும் வரக் கூடாது
நானும் வரமாட்டேன்
பேச்சு பேச்சாத்தான்
இருக்கனும்


எனக்கு பொண்ணு
பாத்துட்டு இருக்கேன்
நாங்களும்
வளந்துட்டோம்ல


சரக்கு தயார்
தொட்டுக்க ஏதாவது
இருந்தா குடுங்க .!


சொன்னா கேளுமா
உன் வாழைப்பழத்த
நான் திருடி திங்கல


இந்த ஊருக்குள்ள
நான் தாங்க பெரிய ஆளு

எந்த பட்டன
அமுக்கனும்கிற ஒன்னு மட்டுந்தாங்க தெரியாது

எப்டீ
எ ஆளு நேத்திதா
மடிஞ்சது மிர்சலா
இருக்கிராள்ள


பூனைப்படைன்னு
சொல்லுவாங்களே அது
இது தானோ ?


நம்பள
கலாய்க்கிறதுக்குனே
ஒக்காந்து யோசிப்பானோ


ஐயய்யோ
இதுக்கெல்லாம் காரணம்
நான் இல்லீங்க எதா
இருந்தாலும்
கருத்துரையில் சொல்லீட்டு போங்க

அவன் பார்த்துக்குவான்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

இத யாரும் பார்க்காதீங்க ...

பாக்க வேண்டான்னா
கேக்கவா போரீங்க
போங்க அங்க என்ன
தான் நடக்குதுனு
பாருங்க

நீங்க கருப்பா இருந்தாலும் கலையா
இருக்கீங்க

நம்ம காதலிச்சு
கல்யாணம்
செஞ்சுகிட்டா நம்ம
குடும்ப பகை எல்லாம்
தீர்ந்திடும் என்ன
சொல்ர நீ

எம்பேரு என்ன
தெரியுமா ? சுள்ளான்
எங்க தெரு
பொண்ணுக கிட்ட
வச்சுகிட்ட வால ஒட்ட
நருக்கிடுவேன்


காதல் தோல்விப்பா
வாழ்வே மாயம்
உலகே மாயம்


காதலிக்க
எங்கயெல்லாம் இடம்
பாக்க்கராங்கயா


இதுக்காகவே
உட்காந்து
யோசிப்பாங்கலோ


தண்ணீல நீந்திகிட்டே
முத்தம் கொடுக்கிற
சுகமே தனிதாம்பா



போங்க எனக்கு வெட்கமா இருக்கு



மாமா தந்தம் குத்துது
அடிப்போடீ இது
இல்லேனா ஒரு பய
மதிக்க மாட்டான்


உன்னோட உதடு
கொய்யா பழம் போல
அழகா இருக்கு


தல என்ன தல
இப்படி தனியா ?
போடா ஆடி மாசமாம்
பொண்டாட்டிய
கூட்டீட்டு போய்டாங்க

சாச்சுட்டாங்கயா
சாச்சுப்புட்டாங்கய்யா

... படம் பாத்துட்டு
கருத்து சொல்லாம
போனா எப்பூடீ டீ டீ





வெள்ளி, 23 ஜூலை, 2010

உதட்டுக்கு ஆகாது ...

( முத்தம் திண்ணும் மோகினிக்
கவிதைகளின் தொடர்ச்சி )

நமது காவிரிக் கரைப்
பூங்கா சந்திப்பில்
முதல் முறையாக
உன் இதழ் வாசித்தேன்

நீயோ ...
கண்கள் வியர்த்து
விட்டாய்

ஏனடி கண்களில் நீர்
வைக்கிறாய்
நான் தவறு செய்து
விட்டேனா ?

* இல்ல

உனக்கு விருப்பம்
இல்லையா ?

* அது இல்ல

உதடு கடித்து
விட்டேனா ?

* அதுவும் இல்ல

பிறகு இந்த நீர் ஏனடி?


நீ ... கண்களைத்
துடைத்துக் கொண்டு
சொன்னாய்

போடா !
ஒற்றை முத்தம்
உதட்டுக்கு ஆகாது
என்பார்கள் !...
அதை நினைத்துத்
தான் ...

( உங்கள்
கருத்துக்களை
கருத்துரையில் பதிவு செய்யுங்கள் )

ஒரு இனிப்பான காரம் ...

(முத்தம் திணணும்
மோகினி
கவிதைகளின்
தொடர்ச்சி )



நீ...
மொத்தமா கேட்பதை
முத்தமா கேட்கிறாய்
முத்தமா கேட்பதையும்
சத்தமா கேட்கிறாய்

* சரி ... சரி சத்தம்
இல்லாம காதோரம் கேட்கிறேன் காலைக் கடனை கடன் சொல்லாமல்
கட்சிதமா தீர்த்திடு

கணக்குக்கும் எனக்கும்
எப்பவுமே ஆவாது
ஒன்னும் ஒன்னும்
சேர்த்து மூனா தரவா ?

* ஐயய்யோ தப்புடா
ஒன்னும் ஒன்னும்
சேர்த்தா பதினொன்னு
பாரடா

இது எந்த ஊர் கணக்கு
* எங்க ஊர் கணக்கு

பதிக்கவா ஒன்னுதான்
* ம்ம்ம்
பதினொன்னு தா

போடி நீயும் உன்
கணக்கும்
*ஏதோ கொடுத்து
கொடுத்து சிவந்து
போன கௌவ்வை
இதழ் கோப்பெருஞ்
சோழன்னு பீத்திக்குற
இனிப்பு ஒன்னு
கேட்டா இல்லீங்கற


நீ கேட்ட இனிப்பு
இப்போதைக்கு இருப்பு
இல்ல ... சுடச்சுட
காரம் இருக்கு
வேணுமா ?

*காரமா ? புதுசா இருக்கே
புதுசு தான்
உனக்காகவே சுடச்சுட
என் உதட்டால
செஞ்சது வேணுமா ?

* அது இது ன்னு
சொல்லி சின்னப்
பொண்ண
ஏமாத்தாதடா ?
வித்யாசம் என்னடா ?


இனிப்பு சாப்டா இரண்டு நாள்ள
திகட்டிடும் முப்பது,
அறுபது
கணக்குக்குள்ள
முடிஞ்சிடும் ஆனா
காரம் சாப்பிட்டா ...
*சாப்பிட்டா ?

காது அடைக்கும்
கண்ணு கலங்கும்
இதழ் இளஞ்சூட்டில்
கொதிக்கும்
உசுருக்குள் அனல்
ரொம்ப அடிக்கும்

இப்ப சொல்லு என்ன
வேணும் ?
இனிப்பா ? காரமா ?


* அப்பப்ப ...
இனிப்பு கொடு
அதிகமா காரம் கொடு

சரியா ?

ம்ம்ம் ... ம்ம்ம் ...
ம்ம்ம் ...


ஐயய்யோ
யாராவது
இருக்கீங்களா ?

* யாரும்
பார்க்கலையே ...
... ..

(உங்கள்
முத்தம் திண்ணும்
மோகினி இதேபோல்
உங்கள்
இதழ் கடித்து காரம்
சாப்பிட்டிருந்தால்
கருத்துரையில்
பதிவு செய்யுங்கள் )