செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சூரியனைச் சுட்ட நெருப்பு (பாரதி ...)

பாரதி ... நீ
சூரியனைச் சுட்ட நெருப்பு- புயலை எரித்த புதுத் தென்றல்
மலையை உடைத்து எரிந்த தமிழ் உளி

நீ ... உன் எழுத்து ஏவுகணைகளை ஏந்தியபோதுதான் அந்த பருத்த பீரங்கிகளுக்கும் பயம்வந்தது

கருவை மட்டும் சுமந்த எங்கள் பெண்கள் கவியை சுமந்ததும்உன்னாள் தான்

தமிழ் தாயும் மார்தட்டிக்
கொள்கிறாள் உன்னாள் தமிழ்பபாலை எங்களுக்கு முலை ஊட்டியதற்காக

உன் கனல் வரிகளைக்
கொஞ்சம் கடன் கொடுப்பாயா எங்கள் உரிமைக்கூழ் காய்ச்ச உலை வைக்க வேண்டும்.

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக