புதன், 6 அக்டோபர், 2010

தபூ சங்கர் கவிதைகள்

நான் வழிபட இந்த
உலகத்தில்
எத்தனையோ கடவுள்
இருக்கின்றது
ஆனால் நான்
காதலிக்க இந்த
உலகத்தில் நீ மட்டும்
தான் இருக்கிறாய்

சிந்தும் மழை மீண்டும்
மேகத்துக்குள் போவது
இல்லை ஆனால்
நீ சிந்தும் வெட்கம்
மெல்லாம் மீண்டும்
உன்
கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறது

என் சின்ன இதயத்தில்
உன்னை எப்படி குடி
வைக்கப் போகிறேன் என்றிருந்தேன்
நீ உள்ளே நுழைந்ததும்
என் இதயம்
பெரியதாகி விட்டது

நில உச்சவரம்பு
சட்டம் போல
அழகு உச்ச வரமபுச்
சட்டம் பேட்டுத்தான்
உன் அழகின்
கொட்டத்தை அடக்க
வேண்டும்

புதிய புடவை
எப்படி இருக்கு
என்றாய்
நல்லா இல்லனு
சொல்லு என்று
கெஞ்சியது நீ
களைந்து கொடியில்
போட்டிருந்த புடவை

நீ முகம் கழுவுகையில் ஒடிய
தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டு விட்டேன்
நான் ஒவ்வொரு
நாளும் இவ்வளவு
அழகையா வேண்டாம்
என்று நீ நீரில்
விடுகிறாய்

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்
இவன் உனக்காகப்
படைக்கப்பட்டவன்
இப்படிக்கு
இறைவன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக