செவ்வாய், 22 ஜூன், 2010

விழித்திடு தோழா

விடியல் வருகின்ற
நேரம் உன் விழிகளில்
எதற்கிந்த பாரம்
நம் கனவுகள்
கை கூடும் காலம் இனியும் இருள் கண்டு எதற்கிந்த சோகம்

நாம் சிறகுகள் முளைத்தும் கோழிகளா?
வெறும் சில்லரை பொருட்கள் தான் நம்
தேவைகளா?

இது உரிமை மீட்கும்
போராட்டம்
இதற்கு நம் ஒற்றுமை
ஒன்றே உயிரோட்டம்

தடைகள் உடைத்திட
எழுந்திடு தோழா
நம் தாயிடம் குடித்தது
பாலன்றி வேறா ?

சாதனை படைத்தவை நம் கைகள் பல சரித்திரம் படைத்தவை நம் கைகள்
கோடிச் சூரியனின்
தீப்பிழம்பை கொட்டிச்
செய்தவை நம் விழிகள்

ஒப்பனை முகங்களை நம்பாதே
உன் உரிமைச் சிறகுகளை இழக்காதே

வாழ்க்கை என்பது
நீரோட்டம்
இதில் வாழத்தேவை
போராட்டம்

வலிகள் இல்லாமல்
வாழ்க்கையா ?
அப்படி வாழ நினைப்பது
இயற்கையா ?

ஈராயிரம் இதயங்கள்
உனக்காக
இனியும் கொடுமைகள்
பொறுப்பது எதற்காக ?

இனிஒரு ... இனிஒரு
விதி செய்வோம்
நம் உரிமை மீட்கும்
போரினில் வெல்வோம்

1 கருத்து:

  1. நாம் சிறகுகள் முளைத்தும் கோழிகளா?
    வெறும் சில்லரை பொருட்கள் தான் நம்
    தேவைகளா?


    மிக அருமையான வரிகள் தோழர்,வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு