வெள்ளி, 2 ஜூலை, 2010

சுனாமி (ஆழிப்பேரலை)

ஏ கடலே
அள்ள அள்ள
அளவில்லாமல்
கொடுத்தவளே-என்ன ஆனதடி உனக்கு ?

நேற்றுவரை தாலாட்டு பாடிய நீ -இன்று
ஏனடி முகாரியை
முர்க்கத்தனமாய்
பாடுகிறாய்?
அலைகளால் மணலை வாரி எங்கள் மீது
மூடுகிறாய்

உன்னைத் தாய்
என்று தானடி
சொன்னோம்-ஏனடி
பேயானாய்! பிஞ்சு
உயிர்களைத் தின்ற
பிசாசு ஆனாய்?


உந்தன் உப்பை
தின்றதற்காகவா
எங்கள் ஊன் தின்றாய்
உயிர் தினறாய்
உடமைகள் தின்றாய்

பூமியின் மூன்று
பகுதிகளை முழுவதுமாக தின்றுமா உன் பசி
அடங்கவில்லை!

உன்னிடம் இருக்கும் உப்பு போதாதா?
எங்கள் கண்ணீரும்
சேர்ந்தா கரிக்க
வேண்டும்

எங்கள் உதிரம் குடித்தா-உன் உயரம்
வளர வேண்டும்


உன் அலையோடும்
கரையோடும் நண்டு
படித்து விளையாடியதற்கா
எங்கள் குழந்தைகளை
நரபலி கொண்டாய்?

தினம் தினம் சூரியனை விழுங்கிய சூடு தனிக்கவா
எங்கள் கிராமங்களின்
குருதி குடித்தாய்?


இன்று...
உன்னுள் இருப்பது
தண்ணீர் இல்லையடி
எங்கள் கண்ணீர்

உன்னுடன்
காதல் கொண்டோம்
கவிதை கொண்டோம்
அதனாலா கண்ணீர்
கொள்கிறோம்

உன்னில்...
அமைதி வேண்டும்
அன்பு வேண்டும்
அணைப்பு வேண்டும்

வேண்டாம்...
வேண்டவே வேண்டாம் சுனாமி
என்ற சொல் கூட
வேண்டாம்

ஏ கடலே...
... ... ...
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக