ஞாயிறு, 4 ஜூலை, 2010

கருகிய பூக்களின் கண்ணீர்த் தாரைகள்

(கலவரத்தில் கோவை விவசாய கல்லுரி மாணவிகள் எரிக்கப்பட்ட நிகழ்வுக்காக எழுதப்பட்டது)

எங்கள் தேகத்தைச் சுட்ட நெருப்பின் வெப்பம்
உங்கள் வீட்டிற்கு வந்த செய்தித் தாள்களிலும் இருந்தது
மூன்று நாட்கள் மட்டுமே !

நீ என்ன விருந்தாணரால் பூமிக்கு வந்தவனா ?
நீ தாயிடம் பால் குடித்து வளர்தவன் தானா ?
அன்று மனித இயல்பு
மறந்தும்
வரவில்லையா ?

ஏ மயான மன்னவனே
உன் நெற்றியில்
இருப்பது என்ன குருட்டுக் கண்ணா ?

எச்சில்
உருண்டைகளுக்காக
பெட்ரோல் குண்டை
பிடித்தவனை விட்டு
விட்டு எங்களை
எரித்து விட்டாயே !

பிரம்மனே ...
சுயநினைவில் தான் இருந்தாயா ?
எங்கள் கவிக்கு முன்னுரை எழுதிக்
கொண்டிருக்கும்
போதே ஏன் பேனா முனையை முறித்துக்
கொண்டாய் ?

இலட்சியங்களை
கொண்ட எங்கள்
உயிரின் மதிப்பு
வெறும்
இலட்சங்களா ?


ஆரத்தி எடுக்க
நினைத்த பெற்றோர்கள் கையில்
அஸ்தியை
கொடுத்தவனே இனி தாகத்திற்கு
எங்கள் குழந்தைகளின்
.... குடி அப்படியாவது ... உணவில் உப்பு சேர்பபதன் உன்னதம் தெரியட்டும்


காலனே எந்த ராமனுக்காக இந்த சீதைகளை தீக்குளிக்க வைத்தாய் ?
எந்த கும்பகர்ணனை
எழுப்ப எங்கள் வாழ்க்கைக்கு சங்கு
ஊதினாய் ?

இன்றும் ...
காலையில் உங்கள்
கால்களை நனைக்கும்
பனித்துளிகள்
எங்கள் அஸ்திப்
பெருமூச்சின்
ஆவிப்படலங்கள்

காலில் பட்டதா ?
இதயம் சுட்டதா ?



உங்கள் கருத்துக்களை கருத்துரையில் பதிவு செய்யுங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக