திங்கள், 5 ஜூலை, 2010

சுதந்திரம்

இந்தக் கொடிமரத்தின்
வேருக்கு செந்நீர்
சிந்திய இதயங்கள்
எத்தனை எத்தனை

இந்த சுதந்திரக் காற்று
சுற்றிவர முகாரி
பாடப்பட்ட
மூச்சுக்காற்றுக்கள் தான் எத்தனை எத்தனை


துக்குமேடைகளும்
தோட்டா மழைகளும்
சுமந்த ஆன்மாக்கள் தான் எத்தனை எத்தனை

இது யுத்த
வேள்வியில் சிந்திய
இரத்தத்தால்
விளைந்த விதை இதை வெரும் பேச்சால் மட்டுமே
வளர்ப்பது என்ன முறை

சுதந்திரம் ...
ஒவ்வொரு அணுவிற்கும்
உயிர் தருவது
சுதந்திரம்... உணர்வு
தருவது சுதந்திரம்

உரிமையில்லாத
சொர்கம் கூட நரகம்
தான்

எது சுதந்திரம் ?
இலஞ்சம் வளர்ப்பதா சுதந்திரம் ? இல்லை
பஞ்சம் தீர்ப்பது சுதந்திரம்


தானியமோ
தளவாடமோ
தன்னிறைவு அடைவது சுதந்திரம்

ஐந்து வருடத்திற்கு
ஒருமுறை வாக்குக்கு
நூறு வாங்கித் தருவதா சுதந்திரம் ?

வாக்களிக்காத
ஒவ்வொருவரும்
அந்நாட்டின்
அடிமைகளே

இனியும் அடிமை முத்திரை குத்திக் கொள்வதில்
ஆனந்தப்படாதீர்கள்

வருமைக்கோடு
என்ற வார்த்தை கூட
இல்லாத நாடே
சுதந்திரக் காற்றை
சுத்தமாக சுவாசிக்கும்

இலட்சியம் கொண்ட
சுதந்திரமே நிச்சயம்
வாழும்


ஒவ்வொரு விடியலும்
நமக்காக ... இனி
உறக்கம் என்பது
எதற்காக ?

கனவுகளை
உயர்வாக்குவோம்
கடின உழைப்பினை
விதையாக்குவோம்

இதயம் முழுவதும்
இலடசியத்தால்
நிரப்புவோம்

இனி
சுதந்திரத்தின் உச்சத்தை
எய்துவோம்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக